செய்யாறு நகரில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் || Seized 150 kg of banned plastic
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
செய்யாறு நகரில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
செய்யாறு நகரில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
செய்யாறு, பிப்.27-

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் விஜய் பிங்ளே உத்திரவின் பேரில் திருவத்திபுரம் நகராட்சி குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுரம் விநியோகம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

மேலும் சில வணிக நிறுவனங்களில் தொடர்ந்து தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் பைகள் விற்பதும் பயன்படுத்துவதும் தெரியவந்தது. அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ் மேற்பார்வையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன், சமுதாய அமைப்பாளர் அம்பேத்கார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது தீங்கு விளைவிக்ககூடிய 40 மில்லி மைக்கிரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்து விற்றதை சோதனையின் போது கண்டுபிடித்தனர்.

வணிக நிறுவனங்களில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் வைத்து விற்ற வியாபாரிகளிடம் ரூபாய் 17,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவண்ணாமலை

section1

மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை: போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது

தண்டராம்பட்டு அருகே உள்ள மலவாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 30). மத்திய ரிசர்வ் படை ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif