வேலூரில் போலீஸ் நிலையம் முன்பு ரகளையில் ஈடுபட்ட அரவாணிகள்: 3 பேர் கைது || vellore police station before fight thirunangaigal 3 persons arrested
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
வேலூரில் போலீஸ் நிலையம் முன்பு ரகளையில் ஈடுபட்ட அரவாணிகள்: 3 பேர் கைது
வேலூரில் போலீஸ் நிலையம் முன்பு 
ரகளையில் ஈடுபட்ட அரவாணிகள்: 3 பேர் கைது
வேலூர், பிப்.23-

வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஜோதிகா உட்பட சிலர் அவசர தேவைக்காக கஸ்பாவை சேர்ந்த திருநங்கை சினேகா என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாக தெரிகிறது. இதில் குறிப்பிட்ட தொகையை திரும்ப கொடுத்துள்ளனர். இந்நிலையில் பாக்கி தொகைக்கு அதிக வட்டி கணக்கிட்டு பணத்தை பைசல் செய்யும்படி சினேகா மிரட்டுவதாக கூறி ஜோதிகா மற்றும் சிலர் வேலூர் தெற்கு போலீசில் நேற்று மாலை புகார் செய்தனர். அப்போது 50க்கும் அதிகமான திருநங்கைகள் 2 பிரிவுகளாக போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது திருநங்கைகளுக்கு இடையே வாக்குவாதம் முற்றி போலீசார் முன்னிலையிலேயே கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எண்ணிய இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் உத்தரவுப்படி திருநங்கைகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சினேகா தரப்பினர், கும்பலாக போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரிடம் சில்மிஷம் செய்தனர். இதை பார்த்த சப்- இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி திருநங்கைகளை போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே விரட்டினர். மேலும் தனது செல்போனில் இந்த காட்சிகளை படம் பிடித்தபடி போலீஸ் நிலைய முன்பு நின்று கொண்டிருந்தார். இதை பார்த்து மேலும் ஆத்திரமடைந்த திருநங்கைகள் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி முன்பாக நின்றபடி , கைகளை தட்டி வாக்குவாதம் செய்ததோடு தாங்கள் அணிந்திருந்த துணிகளை நடுரோட்டிலேயே கழற்றி போட்டு விட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்துக்குள் சென்றுவிட்டார்.

அதே நேரத்தில் சினேகா, பூஜா, காவியா ஆகிய திருநங்கைகளை போலீசார் கைது செய்து அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்துவதற்காக வேனில் ஏற்றினர். இதைப்பார்த்த திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்களையும் தாக்க முயன்றனர். மேலும் போலீஸ் வேன் வெளியில் வந்ததும் வேனை வழிமறித்து கலாட்டா செய்தனர்.

திருநங்கைகளின் இந்த ரகளையை நூற்றுக்கும் அதிகமான மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் செய்வதறியாமல் போலீசார் திணறினர். பின்னர் ஒரு வழியாக திருநங்கைகளை அங்கிருந்து விரட்டினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - வேலூர்

section1

சுற்றுலா தலமாக மாறிவரும் ஓட்டேரி ஏரி

வேலூர், நவ.27–வேலூர் ஓட்டேரி ஏரி நிரம்பி கோடிபோவதால் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ....»