வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிட தடை நீடிப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு || Veerappan gangs hang ban extension supreme court
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிட தடை நீடிப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிட தடை நீடிப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, பிப். 20-

கர்நாடகாவில் பாலாறு பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு வீரப்பன் கோஷ்டியினர் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் கூட்டு அதிரடிப் படையைச் சேர்ந்த 22 போலீசார் பலியானார்கள்.

இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த மைசூர் தடா கோர்ட்டு, 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். ஆனால் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு 4 பேருக்கும் ஆயுள் தண்டனையை மாற்றி தூக்கு தண்டனை அறிவித்தது.

இதையடுத்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த மனுவை சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தள்ளுபடி செய்தார்.

தற்போது வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் கர்நாடகா மாநிலம் பெல்காமில் உள்ள சிறையில் உள்ளனர். கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதைத் தொடர்ந்து மைசூர் கோர்ட்டு 4 பேரையும் தூக்கில் போடும் தேதியை அறிவிக்க இருந்தது. இந்த நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் சார்பில் வக்கீல் சமீக் நரேன் என்பவர் கடந்த 18-ந் தேதி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் மீதான குற்றச்சாட்டு பற்றி மறு விசாரணை நடத்த வேண்டும். அதுவரை இவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், 4 பேரையும் தூக்கிலிட 20-ந் தேதி (இன்று) வரை இடைக்கால தடை விதித்தனர். 4 பேர் சார்பில் திருத்திய மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு விதித்த தடையை நீடித்து உத்தரவிட்டனர். இதை ஒத்த வழக்கான புல்லர் வழக்கின் தீர்ப்பு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்றும் அறிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தனது 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி ....»