பாரதீய ஜனதாவை மதவாத கட்சி என்பது திட்டமிட்ட சதி: முஸ்லிம் தலைவர்களிடம் ராஜ்நாத் சிங் விளக்கம் || bjp leader rajeadsing religious discribe muslim leaders
Logo
சென்னை 24-10-2014 (வெள்ளிக்கிழமை)
பாரதீய ஜனதாவை மதவாத கட்சி என்பது திட்டமிட்ட சதி: முஸ்லிம் தலைவர்களிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்
பாரதீய ஜனதாவை மதவாத கட்சி என்பது திட்டமிட்ட சதி: முஸ்லிம் தலைவர்களிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்
புதுடில்லி, பிப், 2-

பாரதீய ஜனதா கட்சி மதவாத கட்சி என்று கூறப்படுவது குறித்து விவாதிக்க முஸ்லிம் தலைவர்களை பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

பின்னர் இதுகுறித்து ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களை பிரித்து பார்க்கும் வேற்றுமை அரசியலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எங்கள் கட்சியின் மீது கூறப்பட்டுவரும் பரவலான மதவாத குற்றச்சாட்டுகளை முஸ்லிம் மக்கள் தவிர்க்க வேண்டும். திட்டமிட்ட சதியின்படி எங்கள் பாரதீய ஜனதா கட்சியின் மீது களங்கம் ஏற்படுத்தப்படுகிறது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மனிதர்களை வேற்றுமை படுத்தும் அரசியல் நடத்தினார் என்று யாரேனும் சொல்ல முடியுமா?

இந்து-முஸ்லிம்களிடையே விரோதத்தை பாரதீய ஜனதா வளர்க்கிறது என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் கட்சி மீது கூறப்பட்டு வரும் பரவலான குழப்பங்களை தவிர்க்க தலைநகரில் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் உதவவேண்டும்.

மனிதநேயம் மற்றும் நீதியின் மீது நம்பிக்கை வைத்தே நாங்கள் ஆட்சி அமைக்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கூட நிறைய கலவரங்கள் நடந்து இருக்கிறது என்று எங்களால் உறுதியாக கூற முடியும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கருப்பு பண விவகாரம்: அருண் ஜெட்லிக்கு ராம் ஜெத்மலானி கடிதம்

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கருப்பு பண விவகாரம் பற்றிய வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif