நகைச்சுவை உணர்வு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்: பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு || humor in life achieve university vice chancellor speech
Logo
சென்னை 19-09-2014 (வெள்ளிக்கிழமை)
நகைச்சுவை உணர்வு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்: பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு
நகைச்சுவை உணர்வு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்: பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு
சத்தியமங்கலம், ஜன. 2-

சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவன தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடந்தது. முதல்வர் மோகன்தாஸ் வரவேற்றார்.

பட்டமளிப்பு விழாவினை கல்லூரி செயலாளர் அருந்ததி தொடங்கி வைத்தார். விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஜேம்ஸ் பிச்சை கலந்து கொண்டு 612 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- கல்வி அறிவை தரும். வாழ்க்கை அனுபவத்தை தரும். கல்வியை கொண்டு வாழ்க்கையை திட்டமிட்டு கடுமையாக உழைத்தால் வெற்றி பெறலாம். எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிந்து நகைச்சுவை உணர்வுடன் இருந்தால் எளிதில் வெற்றி சாத்தியமாகும்.

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதை காட்டிலும் ஒவ்வொரு மாணவனும் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி நிறுவன தலைவர் பெருமாள்சாமி பேசும்போது, மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என்றார். விழாவில் ஆங்கலத்துறை பேராசிரியர் பார்வதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - ஈரோடு

section1

சத்தியமங்கலத்தில் ராஜபக்சேவை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி: வி.சிறுத்தைகள் முடிவு

சத்தியமங்கலம், செப்.18–சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளி சமத்துவபுரத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ....»