எதிரிகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் கடற்படை பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி || India test fires manoeuvrable version of BrahMos
Logo
சென்னை 30-09-2014 (செவ்வாய்க்கிழமை)
எதிரிகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் கடற்படை பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
எதிரிகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் கடற்படை பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
புதுடெல்லி, ஜன. 9-


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் கடற்படை தளம் அமைந்துள்ளது. இந்த கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

290 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை, எதிரி ஏவுகணைகளை ஏமாற்றி தனது நிலையை மாற்றிச்சென்று தாக்கக்கூடிய வல்லமை பெற்றதாகும். இந்த ஏவுகணை அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி தொழில்நுட்பத் தகவல்களை பெறக்கூடிய திறமை பெற்றதாகும். கடல் மட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ள சிறிய இலக்கைக்கூட மிக துல்லியமாக தாக்கி அழிக்ககூடிய வல்லமை பெற்றது.

பிரமோஸ் வகை ஏவுகணை 2005-ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இன்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 34-வது பிரமோஸ் வகை ஏவுகணை என்று சொல்லப்படுகிறது. வெற்றிகரமாக இச்சோதனையை நடத்தியதற்கு இந்திய ராணுவ மந்திரி ஏ.கே அந்தோணி பாராட்டு தெரிவித்துள்ளார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பெறும்: ஜவடேகர்

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெறும் என்று மத்திய தகவல் மற்றும் ....»

160x600.gif
160x600.gif