எலும்பு தேய்மானம் || osteoporosis in women
Logo
சென்னை 01-08-2015 (சனிக்கிழமை)
  • சென்னையில் பல இடங்களில் கனமழை
  • மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே உடல் வாங்கப்படும்: சசிபெருமாள் மகன் பேட்டி
  • சென்னையிலிருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற ரெயில் பெட்டியில் தீ விபத்து
  • கன்னியாகுமரி: சசி பெருமாளின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ செய்யப்படுகிறது
எலும்பு தேய்மானம்
எலும்பு தேய்மானம்

இந்தியாவில் 2.5 கோடி பேர் எலும்புத் தேய்மான நோயால் பாதிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 20 சதவீதம் பெண்கள். 50 வயதை கடந்த ஆண்கள் 10 முதல் 15 சதவீதம் உள்ளனர் எலும்பு மற்றும் எலும்பு திசுக்களின் அடர்த்தி குறைவினால் எலும்புகள் பலவீனமாகி விடுகின்றன.

இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விட்டு விடப்படுகிறது. அப்படியே கவனித்தாலும் அதற்கான முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தவறி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது அதிக அளவில் காணப்படுகிறது. நகர்புறங்களிலும் வாழ்க்கை முறையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

முதுகெலும்பு முறிவில் 83 சதவீதம் எலும்பு தேய்மானத்ததால் ஏற்படுகிறது. முதுகு, இடுப்பு, மணிக்கட்டு பகுதிகளில் தான் பெரும்பாலும் எலும்பு முறிபுகள் ஏற்படுகின்றன. 60 வயதுக்கு அதிகமாக 25 முதல் 60 சதவீத பெண்கள் முதுகெலும்பு அழுத்த முறிவுகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிக அளவில் ஆய்கள் இதனால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக இடுப்பு, எலும்பு முறிவால் பாதிக்கப்படுவோர் இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு ஒரு என்ற விகிதத்தில் உள்ளது. இதுவே மேலை நாடுகளில் 3 பெண்ணுக்கு ஒரு ஆண் என்ற விகிதத்தில் உள்ளது. பெரும்பாலான மேலைநாடுகளில் 70-80 வயதிற்கு மேல் தான் எலும்பு தேய்மான நோய் ஏற்படுகிறது.

ஆனால் இந்தியாவில் 50-60 வயதிலேயே இது ஏற்பட்டு விடுகிறது. எலும்பு தேய்மான நோயைத் தவிர்க்க ஊட்டச்சத்துமிக்க உணவு, உடற்பயிற்சி மூலம் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம். 30 வயது முதல் எலும்பு அடர்த்தி குறையத் தொடங்கி விடுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் வேளைகளில் இது அதிகரிக்கிறது.

எலும்பு  தேய்மானத்திற்கு முழுமையாக சிகிச்சை எதுவும் இல்லை. அதனால் வராமல் காப்பதே நல்லது. புகைப்பழக்கத்தை விட்டொழித்தல், அதிக அளவு மதுபானம் அருந்துதலை தவிர்த்தல், உடற்பயிற்சி செய்தல் போதுமான அளவு கால்சியம், வைட்டமின் டி உள்ள சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை எலும்புத் தேய்மானத்தை தடுக்கும். 
MM-TRC-B.gif