உடல் எடை குறைக்க உதவும் 'ஜிம்' உபகரணங்கள் || Help to reduce body weight gym equipment
Logo
சென்னை 29-11-2014 (சனிக்கிழமை)
  • கோவில்பட்டியில் ரூ.7.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது
  • கனமழை: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
உடல் எடை குறைக்க உதவும் 'ஜிம்' உபகரணங்கள்
உடல் எடை குறைக்க உதவும் 'ஜிம்' உபகரணங்கள்

‘ஜிம்’ என்கிற உடற்பயிற்சிக் கூடத்தில் என்னென்ன உபகரணங்கள் இருக்கின்றன? உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்? என்பதை இப்போது பார்க்கலாம்..... ஜிம் உள்ள இந்த உபகரணங்களை கொண்டு செய்யப்படும்  உடற்பயிற்சிகள் எந்த வகையில் உடல் எடை குறைப்பதில் பயன்படுகிறது என்பதை பார்க்கலாம்.

* முதுகு, தண்டுவட உறுதிக்கு ஹைப்பர் எக்ஸ்டென்ஷன்...... இந்த இயந்திரத்தின் உதவியோடு முன்புறம் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யலாம். முதுகுத் தசைப் பகுதிகளையும், தண்டுவடத்தையும் உறுதி செய்யும் எக்சர்சைஸ். எல்லா வயதினருக்கும் ஏற்றது. டூவீலர் ஓட்டும் பெண்கள், இதனைத் தொடர்ந்து செய்தால் முதுகு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

* கலோரி மைனஸுக்கு எலிப்டிக்கல் ஃபிட்னஸ் க்ராஸ்........ இருந்த இடத்தில்,நின்றபடி சைக்கிள் ஓட்டும் பயிற்சி. உடலின் மொத்த பாகங்களும் செயல்படுவதால் நல்ல எக்சர்சைஸ். கலோரியை குறைக்க உதவுகிறது. எந்த வயதினருக்கும் ஏற்றது.

* ஃபிட்னஸுக்கு ஸ்பின் சைக்கிள்....... இருந்த இடத்தில் சைக்கிள் ரேஸ்! 10 நிமிடப் பயிற்சியில் 100 கலோரி வரை குறைக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கும் ஃபிட்னஸ் பிரியர்களுக்கும் சரியான சாய்ஸ்.

* வீகைகள், தோள்கள் வலுவாக........ பைசெப்ஸ் கர்ல் கைகளை நீட்டி, மடக்கும் பயிற்சியை இந்த இயந்திரத்தில் செய்யலாம். எளிதாகச் செய்ய, கடினமாகச் செய்வதற்கு ஏற்ப ப்ரோக்ராமை மாற்றி வைத்துக் கொள்ளலாம். கைகளில் உள்ள சதைகளை குறைக்கும். தோள்களுக்கு பலம் தரும். சிக்கென்ற தோற்றம் தரும். தினமும் 15 நிமிடங்கள் செய்தால் போதும்.