திருப்பாவை 15 || thiruppavai 15
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
திருப்பாவை 15
திருப்பாவை 15

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுஉடையை!’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்ஆனை கொன்றானை, மாற்றாரை மாற்றுஅழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ எம்பாவாய்.
 
பொருள்..... அழகிய கிளி போன்ற பெண்ணே இன்னுமா உறங்குகிறாய். இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் போய் தூங்குறாயே? உன் திறமையான செயல்பாடு புரிந்து விட்டது. எல்லோரும் வந்து விட்டார்கள்.
வேண்டுமானால் வந்து எண்ணிக் கொள். பலம் பொருந்திய யானையை கொள்றவன் பகைவரை போரில் வெல்லும் திறமை மிக்கவன். மாயச் செயல்கள் பல புரிந்த கண்ணனை புகழ்ந்து பாடி பாவை நோன்பு நோற்கிறோம். நீ விரைந்து வா?
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif