திருப்பாவை 12 || Thiruppavai 12
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
திருப்பாவை 12
திருப்பாவை 12

கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறுஆக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனதுக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈது என்ன பேருறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!

பொருள்......

இளமையான கன்றுகளை உடைய எருமைகள் தம் கன்றின் மீது இரக்கம் கொண்டு கன்றுகளை நினைத்து அன்பின் மிகுதியால் பாலை இடைவிடாது சொரிந்தன. அதனால் மணல் வீட்டில் தரைகள் ஈரமாகி சேறாக்கியது.

இப்படிப்பட்ட எருமைகளையுடைய செல்வ வனமிக்க ஆயர் குலத்தவனின் தங்கையே? மார்கழி மாத பனியில் நனைந்து உன் வீட்டுக்கு அருகே  நிற்கிறோம். இலங்கையில் இராவணனை அழித்த ராமனின் புகழை பாடி கொண்டு இருக்கிறோம்.

ஆனால் நீ வாய் திறந்து எதுவும் பேசாமல் இருக்கிறாய். இப்பகுதியில் உள்ள அத்தனை பேரும் தூக்கம் நீங்கி எழுந்து விட்டனர். ஆனால் நீ மட்டும் தூங்கி கொண்டு இருக்கிறாயே? இது முறையா? எழுந்து வா? அனைவரும் சேர்ந்து மார்கழி வழிபாடு செய்வோம்.
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif