திருப்பாவை 11 || thiruppavai 11
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பாவை - 11
திருப்பாவை - 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள்......
இளம் கன்றுகளுடைய பசுக்கூட்டங்களை வைத்து பராமரிப்பவர்கள் ஆயர் குலத்தினர். அதர்மத்தோடு வலிய வருகின்ற பகைவர்களை எதிர்த்து அழிப்பவர்கள். குற்றமற்றவர்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த தங்க கொடியை போன்ற பெண்ணே!

புற்றில் இருக்கும் படம் எடுக்கும் பாம்பு போன்ற அகலமான கண் புருவமும், மயில் தோகை போன்ற அழகிய கூந்தலையும் உடையவளே! நாங்கள் சுற்றத்து பெண்கள் அனைவதும் உன் வீட்டின் வாசலில் வந்து நீலமேக வண்ணனாகிய கண்ணனின் பெயரை சொல்லி பாடுகிறோம். ஆனால் நீ அசைவின்றி உறங்கி கொண்டே இருக்கிறாய். இதற்கு என்ன பொருள்? செல்வ வளம் மிக்க பெண்ணே எழுந்து வா? பரந்தாமரை பாடி துதிப்போம்.
tamil_matrimony_60.gif

VanniarMatrimony_300x100px_2.gif