திருப்பாவை 5 || thiruppavai 5
Logo
சென்னை 02-08-2015 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பாவை - 5
திருப்பாவை - 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூக ஆகும் செப்பேலோர் எம்பாவாய்.

பொருள்....

மாயத்செயல்களை செய்வதில் சிறந்தவன். நிலைப் பெற்ற புகழ் நிறைந்த வட மதுரையில் பிறந்தவன். தூய்மையான நீர் பெருக்கெடுத்து வரும் யமுனை கரையில் வசிப்பவன். ஆயர் குலத்தில் தோன்றிய மாணிக்க விளக்கு போன்றவன். தாய் எனப்போற்றப்படும் யசோதையின் கருவறைக்கு பெருமை தேடித்தந்த கண்ணனிடம் தூய்மையான மனத்தோடு சென்று அவன் திருவடிகளை மலர் தூவி வணங்க வேண்டும். வாயினால் அவனுடைய புகழைப்பாடி மனத்தினால் அவனை நினைத்து வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்களும், இப்பிறவியில் வரப்போகும் பாவங்களும் மறைந்து விடும். ஆகவே அவன் புகழைப் பாடுவோம், வாருங்கள்.
MM-TRC-B.gif