தரிசனத்துக்கு 18 மணி நேரம்: சனி, ஞாயிற்றுக்கிழமையில் திருப்பதி கோவிலில் அலை மோதிய பக்தர்கள் || saturday and sunday tirupati temple devotees crowd
Logo
சென்னை 18-12-2014 (வியாழக்கிழமை)
தரிசனத்துக்கு 18 மணி நேரம்: சனி, ஞாயிற்றுக்கிழமையில் திருப்பதி கோவிலில் அலை மோதிய பக்தர்கள்
தரிசனத்துக்கு 18 மணி நேரம்: சனி, ஞாயிற்றுக்கிழமையில் திருப்பதி கோவிலில் அலை மோதிய பக்தர்கள்
நகரி, டிச 10-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. தர்ம தரிசனத்துக்கு சென்றவர்கள் கூட 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். இந்த நிலையில் விடுமுறை நாளான 2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 43 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் 1 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தர்ம தரிசனம் செய்ய 18 மணி நேரம் ஆகிறது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட போதிலும் தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நேற்று மதியம் 2 மணி முதல் 300 ரூபாய் சிறப்பு கட்டண கவுண்டர் மூடப்பட்டது. தங்கும் விடுதி, முடி காணிக்கை, லட்டு, உள்பட அனைத்து கவுண்டர்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. இரவில் 12 டிகிரிக்கும் குறைவான வெப்பம் பதிவானதால் கடும் குளிரில் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

நச்சலைட் இயக்கத்தில் சேர மறுத்ததால் கிராமவாசி கழுத்து அறுத்துக்கொலை

ஜார்க்கண்டில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக மத்திய சிறப்பு போலீசார் ....»