விரும்பிய பள்ளியில் மகளை சேர்க்க எல்.கே.ஜி. சீட்டிற்கு ரூ.17 லட்சம் நன்கொடை கொடுத்த பெற்றோர் || parents given 17 lakhs for son lkg sheet
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
விரும்பிய பள்ளியில் மகளை சேர்க்க எல்.கே.ஜி. சீட்டிற்கு ரூ.17 லட்சம் நன்கொடை கொடுத்த பெற்றோர்
விரும்பிய பள்ளியில் மகளை சேர்க்க எல்.கே.ஜி. சீட்டிற்கு ரூ.17 லட்சம் நன்கொடை கொடுத்த பெற்றோர்
சென்னை, நவ. 28-
 
2013-14-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இப்போதே சில மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கிவிட்டன. நவம்பர், டிசம்பர் மாதத்தில் விண்ணப்பம் கொடுத்து பெற்றோர்களிடம் வசூல் வேட்டையை ஆரம்பித்து விட்டன.
 
சென்னையில் உள்ள டாப் சில பள்ளிகளில் வழக்கம்போல் எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பு, குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பங்களை கொடுத்து வருகிறார்கள். கோபாலபுரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர், முகப்பேர், கீழ்ப்பாக்கம், சாந்தோம் உள்பட பல பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் இடம் பிடிக்க அலைகின்றனர். அரசியல் செல்வாக்கு, கல்வித்துறையின் செல்வாக்கு போன்றவற்றை பயன்படுத்தி பரிந்துரை கடிதங்கள் மூலம் பிரபல பள்ளிகளில் இடம் பிடிக்க காத்து கிடக்கின்றனர்.
 
வசதி உள்ளவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தை குறிப்பிட்ட சில பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்ற பேராவலுடன் பள்ளி நிர்வாகத்தை அணுகிறார்கள்.
 
தனியார் பள்ளிகள் மே மாதத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும். தற்போதைய தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கல்வித்துறையின் உத்தரவை எந்த பள்ளியும் கண்டு கொள்வது இல்லை. வழக்கம்போல மாணவர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
 
தனியார் பள்ளிகள் இப்போதே தொடங்கிய மாணவர் சேர்க்கையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் மகளுக்கு எல்.கே.ஜி. சீட்டை ஒரு பெற்றோர் கேட்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் இடம் தர மறுத்துவிட்டது.
 
தன் மகளை எப்படியாவது அந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த பெற்றோர் அந்த பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் கட்டிடம் கட்டித் தருவதாக உறுதியளித்தார். அதை ஏற்று பள்ளி நிர்வாகம் அவரது மகளுக்கு எல்.கே.ஜி. சீட் வழங்கியுள்ளது.
 
இதேபோல மைலாப்பூரில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் ஒரு பெற்றோர் இடம் கேட்டும் கிடைக்காததால் ரூ.17 லட்சத்தில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம் கட்டித்தருவதாக கூறினார்.
 
இந்த வாய்ப்பை பள்ளி நிர்வாகம் சரியாக பயன்படுத்தி கொண்டு அவரது குழந்தைக்கு உடனே இடம் கொடுத்துள்ளது. சென்னையில் உள்ள டாப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க லட்சகணக்கில் நன்கொடை வசூலிக்கிறார்கள். முன்பெல்லாம் கல்வி கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக பல ஆயிரங்கள் கேட்பார்கள்.
 
ஆனால் இப்போது வேறு மாதிரியான கோரிக்கைகளை பெற்றோர் முன் வைக்கிறார்கள். பள்ளியை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் தேவைப்படுகிறது. அதை கட்டி கொடுத்தால் உங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் தருகிறோம் என்ற புதிய முறைகளை பின்பற்றுகிறார்கள்.
 
வசதி படைத்த சில பெற்றோர்கள் அத்தொகையை பெரிதாக கருதாமல் சம்மதம் தெரிவித்து அதற்கான திட்ட செலவு தொகையை முன் கூட்டியே பெற்று விடுகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

சென்னையில் ரூ.145 கோடியில் மேலும் 30 ஆயிரம் தெரு விளக்குகள் அமைக்கப்படுகிறது: மாநகராட்சி நடவடிக்கை

15 நிதியாண்டில் 34,425 தெருவிளக்கு கம்பங்களுடன் எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்க தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதி ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif