தீபாவளி பலகாரம் செய்யும் பழக்கம் வீடுகளில் குறைந்தது: கடைகளில் மொத்தமாக ஆர்டர் || Habit of sweets at least in the home order in stores
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • 2015-16 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் ஜி.டி.பி 7.3 சதவீதமாக உயர்வு
  • காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார் காபு சமூக தலைவர் பத்மநாபம்
தீபாவளி பலகாரம் செய்யும் பழக்கம் வீடுகளில் குறைந்தது: கடைகளில் மொத்தமாக ஆர்டர்
தீபாவளி பலகாரம் செய்யும் பழக்கம் வீடுகளில் குறைந்தது: கடைகளில் மொத்தமாக ஆர்டர்
திருச்சி, நவ. 12-

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பக்ரீத், ரம்ஜான், ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றன. இதில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகள் கூடுதல் உற்சாகத்தோடு கொண்டாடப்படும். இந்த வகையில் தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் நாளை (13-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. ஆனால் தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, புதிய படம் ரிலீஸ் ஆகியவற்றோடு வீடுகளில் செய்யப்படும் அதிலும் முறுக்கு, சீடை, கேக் (முட்டைகோஸ்) சுசியம், போன்ற பலகாரங்களும் இடம் பிடிக்கும்.

இதற்காக 3, 4 நாட்களுக்கு முன்பே அதிரசத்துக்கு மாவு இடித்து, வெல்லப்பாவு ஊற்றி, ஏலக்காய் போட்டு தயாரிக்க தொடங்கி விடுவார்கள். முறுக்கு, மற்ற பலகாரங்கள் தயாரிக்கும் பணியிலும் பெண்கள் ஈடுபடுவார்கள். இதனால் ஒரு வீட்டில் பலகாரம் செய்யும் வாசம், பக்கத்து வீடுகளுக்கும் வீசும். அதன் வாசத்தை வைத்தே பலகாரத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஒரு வீட்டில் ஒரு இனிப்பு செய்தால், பக்கத்து வீட்டில் வேறு வகை பலகாரம் செய்து, ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொள்வார்கள். ஆனால் இப்போது, காலம் மாறிவிட்டது.

வீடுகளில் பலகாரம் செய்யும் பழக்கம் பெருமளவு குறைந்து விட்டது. திருச்சி மக்கள் கடைகளில் பலகாரங்களை மொத்தமாக ஆர்டர் செய்து, வாங்கிச் செல்கிறார்கள். இதற்காக ஏற்கனவே பிரபல இனிப்பு கடைகளில் “புக்கிங்” செய்து உள்ளனர். இப்போது திருச்சியில் ஜவுளி, நகை, எலக்ட்ரானிக்ஸ் கடைகளை போல இனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பல கடைகளில் வீடுகளுக்கு டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.

கடைகளில் இருந்து பலகாரம் வாங்கப்படுவதால், வீடுகளில் செய்யப்படும் அதிரசம், முறுக்கு, சுசியம் போன்ற வற்றை பார்ப்பது அரிதாகி விட்டது. காஜீ கத்தலி, பர்பி வகை இனிப்புகள், புருட் மிக்சட் ஸ்வீட் என விதவிதமான நெய் இனிப்புகள் வீடுகளை வந்தடைகின்றன. வீடுகளில் செய்யப்படும் இனிப்புகளை பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கும் போது அவர்கள் தயாரித்த தீபாவளி பலகாரத்தை பதிலுக்கு கொடுப்பார்கள். இதனால் புதிய பலகாரம் மாற்றப்படுவதோடு சுவையும் புதிது புதிதாக இருக்கும். ஆனால் இப்போது, கடைகளில் இருந்து இனிப்புகளை வாங்கி பரிமாறுவதால், ஒரே வகையான இனிப்புகள் சுவை ஆகியவையே அனைத்து வீடுகளையும் சுற்றி வருகின்றன.

அட்டை பெட்டிகளில் கடைகளின் பெயர் மட்டும் மாறி இருக்கும். இனிப்புகள் ஒரே மாதிரியானவையாக உள்ளது. அதே போன்று புத்தாடைகளும், ஜவுளி எடுத்து டெய்லரிடம் அதை கொடுத்து, தைத்து அணிவது மறைந்து, ரெடிமேடு காலமாகி விட்டது. இனிப்பு, உடை என அனைத்துமே ரெடிமேடாகி விட்டது. உறவு முறைகளும் அக்கம் பக்கம் பழக்கங்களும் தேவைப்படும் போது, பழகிக்கொள்வது போல ரெடிமேடு ஆகிவிட்டது. பழைய முறை வரவேண்டும். அதற்கு முறுக்கு, அதிரசம், சுசியம் போன்ற பண்டிகை பலகாரங்களும் அவசியம் இடம் பெற வேண்டும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

section1

திருச்சி –சத்திரப்பட்டியில் விபத்து: டிரைவர்–பெண் பலி

திருச்சி, பிப்.8–திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி (வயது 50).சாலையோரம் வசித்து வரும் இவர் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif