உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கிறேன்: நமீதா || diet exercise and reduce body weight actress nameetha
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கிறேன்: நமீதா
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கிறேன்: நமீதா
ஜப்பான் தொலைக்காட்சி இந்திய அழகியாக தன்னை தேர்வு செய்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நமீதா. புகைப்பட ஆல்பத்தில் இருந்து நமீதா படமொன்றை தேர்வு செய்து ஜப்பானில் உள்ள டோக்கியோ தொலைக்காட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டது.

பல்வேறு நாடுகளில் இருந்து அழகான பெண்களின் படங்களை தேர்வு செய்து அவர்களை அந்த நாட்டின் அழகியாக இந்த டி.வி. நிறுவனம் அறிவிப்பது உண்டு. அதுபோல் நமீதா படத்தை தேர்வு செய்து இந்திய அழகியாக அறிவித்தது.

இதுகுறித்து நமீதா அளித்த பேட்டி வருமாறு:-

ஜப்பானிய தொலைக்காட்சி என்னை இந்திய அழகியாக தேர்வு செய்ததும் மூன்று நாட்கள் தூக்கம் இழந்தேன். அதே நிலையிலேயே மூழ்கி கிடந்தேன். அழகி பட்டம் பெற்றதன் மூலம் எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. தன்னம்பிக்கை தேவைப்படும் காலக்கட்டங்களில் நான் இருக்கிறேன். அழகியானது அதற்கு உதவி உள்ளது. எதையும் இனிமேல் தைரியமாக எதிர்கொள்வேன்.

'இளமை ஊஞ்சல்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இது தயாராகிறது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஏற்கனவே போலீஸ் கெட்டப்புகளில் நடித்துள்ளதால் நடிக்க எளிதாக இருந்தது.

எனக்கு உடம்பில் எடை போட்டுள்ளது. அதை குறைக்க முயற்சி செய்கிறேன். இதற்காக பயிற்சியாளர் ஒருவரை சம்பளத்துக்கு வைத்துள்ளேன். உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் எடையை குறைக்கிறேன்.

இவ்வாறு நமீதா கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

வெள்ள நிவாரணத்துக்கு தனுஷ் ரூ.5 லட்சம் நிதி உதவி

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளம் ....»

தொடர்புடைய கேலரி
நமீதா
MudaliyarMatrimony_300x100px.gif