மருதுபாண்டியர் குருபூஜைக்கு வந்தவர்கள் போலீசார் மோதல்: சப் இன்ஸ்பெக்டர் கொலை || maruthupandiar gurupooja clash sub inspector murder
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
மருதுபாண்டியர் குருபூஜைக்கு வந்தவர்கள்-போலீசார் மோதல்: சப்-இன்ஸ்பெக்டர் கொலை
மருதுபாண்டியர் குருபூஜைக்கு வந்தவர்கள்-போலீசார் மோதல்: சப்-இன்ஸ்பெக்டர் கொலை
சிவகங்கை, அக். 27-
 
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருதுபாண்டியர் சகோதரர்களின் 211-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமானோர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
 
மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பல்வேறு கட்சி பிரமுகர்களும் குறிப்பிட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தினர்.
 
நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் தலைமையில் சூப்பிரண்டுகள் பன்னீர் செல்வம், ஈஸ்வரன், சேகர், அண்ணாத்துரை ஆகியோர் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
இந்நிலையில், குருபூஜையில் பங்கேற்பதற்காக வந்த ஒரு வேன், குறிப்பிட்ட பாதையில் செல்லாமல் வேறு வழியாக அங்கு செல்ல முயன்றது. வேம்பத்தூர் புதுக்குளம் அருகே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த வேனை தடுத்து, அனுமதிக்கப்பட்ட வழியில் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். இதனால் வேனில் இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் போலீஸ்காரர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
 
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த போலீஸ்காரர்கள் குமார், கர்ணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சிவகங்கை

amarprakash160600.gif
amarprakash160600.gif