சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் மீது டிராக்டர் மோதியது: 47 பயணிகள் உயிர் தப்பினர் || tractor clash with flight in chennai airport 47 passenger escaped
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோவில் பிரச்சனை குறித்து அரசு முடிவு செய்யும்: கல்ராஜ் மிஸ்ரா
  • முன்னாள் பிரதமரின் பேரன் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கம்
  • கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரெயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருப்பதாக தகவல்
  • நடிகர் சீரஞ்சீவி திடீர் கைது
சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் மீது டிராக்டர் மோதியது: 47 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை விமான நிலையத்தில்
விமானத்தின் மீது டிராக்டர் மோதியது: 47 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை, செப். 26-
 
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பெங்களூர் செல்லும் 47 பயணிகள் சோதனை முடிந்து அமர்ந்து இருந்தனர். அப்போது பயணிகளின் லக்கேஜ் மற்றும் சரக்குகளை அதில் ஏற்றுவதற்காக டிராக்டரில் கொண்டு வரப்பட்டது.
 
அந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் வேகமாக ஓடி கிங்பிஷர் விமானத்தின் வலதுபுற இறக்கை மீது மோதியது. இதில் இறக்கை சேதம் அடைந்தது. அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
 
சேதம் அடைந்த இறக்கையை சரிசெய்யும் பணி நடக்கிறது.   டிராக்டர் பக்கவாட்டில் மோதியதால் இறக்கை மட்டும் சேதம் அடைந்ததால் பயணிகள் 47 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். விமான பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் நாளை அனைத்து மாநில கவர்னர்கள் கருத்தரங்கம்

நாட்டிலுள்ள மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் இரண்டுநாள் கருத்தரங்கம் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif