அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் இருப்பதால் சென்னையில் அதிக நேரம் மின்வெட்டு செய்ய முடியாது மின்வாரிய அதிகாரிகள் தகவல் || Electricity board officials information
Logo
சென்னை 30-08-2015 (ஞாயிற்றுக்கிழமை)
அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் இருப்பதால் சென்னையில் அதிக நேரம் மின்வெட்டு செய்ய முடியாது மின்வாரிய அதிகாரிகள் தகவல்
அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் இருப்பதால் சென்னையில் அதிக நேரம் மின்வெட்டு செய்ய முடியாது  மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை, செப். 26-
 
தமிழகத்தில் தற்போது சராசரியாக 7500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தினமும் 14 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் மாணவர்களும் அவதிப்படுகிறார்கள்.
 
இரவிலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்களும் குழந்தைகளும் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். பகல் நேரங்களில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு செய்யப்படுவதால் விவசாயிகள் மற்றும் விசைத் தறி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பதிலாக தொடர்ச்சியாக 8 மணி நேரம் மட்டும் மின்சாரம் வழங்கினால் போதும் விசைத்தறிகளை இயக்கிக் கொள்வோம் என்று விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மாநிலம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களில் 14 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படும் நிலையில் சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமலில் உள்ளது. சராசரி மின் உற்பத்தி 7500 மெகாவாட்டில் மூன்றில் ஒரு பங்கான 2500 மெகாவாட் மின்சாரம் சென்னைக்கு மட்டும் செலவிடப்படுகிறது. மீதி 5 ஆயிரம் மெகாவாட்தான் 31 மாவட்டங்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
 
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
செப்டம்பர் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. எனவே அறிவிக்கப்படாத வகையில் அதிக நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தி இனி இப்படித்தான் இருக்கும். எனவே புதிய மின் உற்பத்தி திட்டங்களை எதிர்பார்க்கிறோம். முதலில் விவசாயத்துக்கு தொடர்ச்சியாக 3 மணி நேர மின்சாரம் வினியோகம் அளிக்க முடியுமா, என்ற முயற்சியில் உள்ளோம். அதன்பிறகுதான் விசைத்தறிகளுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர் கே. வேணுகோபால் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னைக்கு மட்டும் 2500 மெகாவாட் மின்சாரம் செலவிடப்படுகிறது என்றார். இதை மின்வாரிய அதிகாரிகளும் உறுதி செய்தனர். அவர்கள் கூறும்போது, சென்னையில் தலைமை செயலகம், பிற அரசுத் துறைகள் மற்றும் பிறநாட்டு தூதரகங்கள் என பல முக்கிய அலுவலகங்கள் உள்ளன. எனவே பிற மாவட்டங்களை போல பல மணி நேர மின்வெட்டை இங்கு அமல்படுத்த முடியாது என்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

வைகோ–திருமாவளவன் கூட்டணியில் விஜயகாந்தை இழுக்க முயற்சி: பேச்சுவார்த்தை நடக்கிறது

சென்னை, ஆக. 30–‘மக்கள் நல கூட்டியக்கம்‘ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி 5 கட்சிகள் ....»

amarprash.gif