காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதுவை அரசு வழக்கு நாளை மனுதாக்கல் || Cauvery water in the Supreme Court demanding government to open tomorrow petition
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதுவை அரசு வழக்கு நாளை மனுதாக்கல்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதுவை அரசு வழக்கு நாளை மனுதாக்கல்
புதுச்சேரி, செப். 26-
 
காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் டெல்லியில் கடந்த 19-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல்-அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆணைய தலைவரும் பிரதமருமான மன்மோகன்சிங் வருகிற 15-ந் தேதி வரை நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட முடியாது என கூறி கர்நாடக முதல்-அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வெளி நடப்பு செய்தார்.
 
ஒரு டி.எம்.சி.க்கும் குறைவான 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் போதாது என்பதால் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமரின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் காவிரியில் புதுவை மாநிலத்தின் பங்கான 6 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கோரி சுப்ரீம்கோர்ட்டில் புதுவை அரசும் மனு தாக்கல் செய்ய உள்ளது. தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் புதுவை மாநிலத்தை ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை யில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது. அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif