இமயமலையில் பனிச்சரிவு: நேபாளத்தில் 9 பேர் பலி || himalayas avalanches 9 killed in Nepal
Logo
சென்னை 27-04-2015 (திங்கட்கிழமை)
இமயமலையில் பனிச்சரிவு: நேபாளத்தில் 9 பேர் பலி
இமயமலையில் பனிச்சரிவு: நேபாளத்தில் 9 பேர் பலி
காத்மாண்டு, செப். 23 -
 
நேபாளம் நாட்டில் உள்ள இமயமலைப் பகுதியில் ஐரோப்பியர்கள் மற்றும் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் 7000 மீட்டர் உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மலைக்கு மேல் படர்ந்திருந்த பனி திடீரென சறுக்கி வந்து மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோரை இழுத்து சென்றது.
 
வெள்ளமாய் இறங்கிய பனியில் புதைந்து குறைந்தது 9 பேர் பலியாயினர். 10 பேர் காயமடைந்தனர் இன்னும் ஆறுபேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
 
காயமடைந்த 10 பேர் காப்பற்றப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.
 
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உட்பட 14 உயரமான மலைகள் உள்ளன. இங்கு இலையுதிர் காலத்தில் மலையேறும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபடுவது வழக்கமாகும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்தது

நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 2500 ....»

amarprakash160-600.gif