நாகர்கோவில்,
செப். 23-
தக்கலையில் பத்மநாபபுரம் சார்பு கோர்ட்டு உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள வக்கீல் அலுவலகத்துக்கு பின்புறத்தில் ஒரு பெரிய சந்தன மரம் இருந்தது. இந்த சந்தன மரத்தை யாரோ வெட்டி கடத்தி சென்று விட்டனர்.
கோர்ட்டு இரவு காவலாளி நாகேந்திரன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தக்கலை போலீசுக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பத்மநாப புரம் சார்பு கோர்ட்டு இரவு நேர காவலாளிகள் நாகேந்திரன் மற்றும் ரத்தினம் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
பணியில் கவனக் குறைவாக இருந்ததாக கூறி நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் அவர்களை சஸ்பெண்டு செய்து உள்ளார்.