பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வர சாத்தியக்கூறு இல்லை: யெச்சூரி || Dont see prospect of early polls as SP BSP supporting UPA Yechury
Logo
சென்னை 03-09-2015 (வியாழக்கிழமை)
பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வர சாத்தியக்கூறு இல்லை: யெச்சூரி
பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வர சாத்தியக்கூறு இல்லை: யெச்சூரி
பக்வாரா, செப்.23-

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை விளக்கிக் கொண்டது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வெளியிலிருந்து தங்களது ஆதரவு அளித்துவருகின்றன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:-

சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவை விளக்கி கொள்கிறவரை இங்கு திடீர் தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை. எப்படி இருந்தாலும், மொத்தத்தில் ஜனநாயகம் என்பது பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டது.

காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா அல்லாது அமையும் மூன்றாவது அணியால் மாற்று கொள்கைகளை மட்டுமே கொண்டுவர முடியும். ஆனால் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. எனவே மூன்றாவது அணி என்பது, கொள்கைகள் பற்றிய விசயமே அன்றி, அரசு அமைப்பது பற்றியது அல்ல.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கமாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ், சதையும் நகமுமாக இருந்த டீசல் விலை உயர்வு மற்றும் அந்நிய முதலீடு பிரச்சினையில் கூக்குரலிட்டார்களே தவிர அதை அவர்கள் கடுமையாக எதிர்க்காதது ஏன்?. கேபினெட் மந்திரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்போது அக்கட்சியின் மத்திய மந்திரிகள் அமைதி காத்தது ஏன்?.

பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் முக்கியமானவராக காட்டிவரும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் தன்னை ஒரு பிரதமர் வேட்பாளராக நிலைநிருத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். 1990-ம் ஆண்டுகளில் இருந்து முலாயம் தன்னை ஒரு பிரதமர் வேட்ப்பாளராக காட்டி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு ....»