20 ஓவர் உலககோப்பை: நியூ. அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் || twenty20 world cup pakistan newzealand match
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
20 ஓவர் உலககோப்பை: நியூ. அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
20 ஓவர் உலககோப்பை: நியூ. அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
பல்லேகெலே, செப்.23-

20ஓவர் உலககோப்பை கிரிக்கெட்போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 3.30 மணிக்கு பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முகமது ஹபீஸ் மற்றும் இம்ரான் நாசீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 5.4 ஓவரில் 47 ரன் எடுத்திருக்கும்போது பாகிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. நாசீர் 25 ரன் எடுத்த நிலையில் சவுதி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து 2-வது விக்கெட்டுக்கு ஹபீசுடன் ஜாம்ஷெட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நியூசிலாந்து பந்து வீ்ச்சை விளாசித் தள்ளினர். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் சராசரியாக 10 என உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ஜாம்ஷெட் 27 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் அரை சதம் அடித்தார். சிறிது நேரத்தில் ஜாம்ஷெட் 56 ரன்னில் அவுட் ஆனார்.

எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய ஹபீஸ் 48 ரன்னில் போல்டு ஆனார். அடுத்ததாக வந்த அக்மல் 3 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் உமர் அக்மல் 23 ரன்னிலும், அப்ரிடி 12 ரன்னில் வெளியேறினர். இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 177 ரன் எடுத்தது.

178 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

20 ஓவர் உலக கோப்பை: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif