ஆரணி அருகே தி.மு.க. ஊராட்சி தலைவர் கொலையா?: சாலையோரம் பிணமாக கிடந்தார் || arani near dmk panchayat leader murder
Logo
சென்னை 05-08-2015 (புதன்கிழமை)
ஆரணி அருகே தி.மு.க. ஊராட்சி தலைவர் கொலையா?: சாலையோரம் பிணமாக கிடந்தார்
ஆரணி அருகே தி.மு.க. ஊராட்சி தலைவர் கொலையா?: சாலையோரம் பிணமாக கிடந்தார்
ஆரணி, செப்.23-

ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சரவணன். தி.மு.க.வை சேந்தவர் இவர் தனது சகோதரர் மகள் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வேட்டவலத்துக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் போனை அவர் எடுக்க வில்லை.

இந்த நிலையில் இன்று காலை அன்மருந்தை ஏரிக்கரை அருகே வளைவில் உள்ள பள்ளத்தில்  சரவணன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கிடந்தது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த சரவணன் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம், மேற்கு ஆரணி ஒன்றிய தலைவர் ஜெயராணி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மற்றும் தி.மு.க.வினர் அங்கு வந்தனர். போலீசார் சரவணன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சரவணனை மர்ம நபர்கள் அடித்து கொன்று உடலை ரோட்டோரத்தில் வீசிவிட்டனர் என்றும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் சேவூர் கிராம மக்கள் போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் தரப்பில் வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சரவணன் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கபட்டது. இதனால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானபடுத்தினர். தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் விபத்தில் இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரிக்கிறார்கள். மேலும் சரவணனுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இலங்கை டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: இந்திய முன்னாள் வீரர் கிரண் மோரே பேச்சு

இலங்கைக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ....»

MM-TRC-B.gif