தீவிரவாதி கசாபை தூக்கிலிட கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு தினமும் கடிதம் எழுதும் சமூக சேவகர் || socialist daily letter to president prime minister for militant hanged
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
  • தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
  • மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் 48 மணி நேரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி
தீவிரவாதி கசாபை தூக்கிலிட கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு தினமும் கடிதம் எழுதும் சமூக சேவகர்
தீவிரவாதி கசாபை தூக்கிலிட கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு தினமும் கடிதம் எழுதும் சமூக சேவகர்
தானே, செப். 23-

மும்பையில் 26-11-2008 அன்று தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் பதிலடி தாக்குதலில், அஜ்மல் கசாப் தவிர பிற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தில், கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதிப்படுத்தியது.

மும்பை ஆதர்ஷ் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கசாப், சமீபத்தில் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினான். அதேசமயம், சமூக சேவகர் ஒருவர், தீவிரவாதி கசாபை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தினமும் கடிதம் எழுதி வருகிறார்.

அவரது பெயர், நாராயணன் பாட்டீல் (வயது 42) மராட்டிய மாநிலம் தானேயை சேர்ந்தவர். இவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். கடிதம் எழுதுவது ஏன்? என்பது பற்றி நாராயணன் பாட்டீல் கூறியதாவது:-

தீவிரவாதிகளுக்கு இரக்கம் காட்டக்கூடாது. மரண தண்டனைதான் சரியான தீர்வு. எனவே, மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபை உடனடியாக தூக்கில் போடவேண்டும்.

கடந்த 2008, டிசம்பர் 17-ந்தேதி முதல் ஜனாதிபதி, பிரதமர், மராட்டிய முதல்-மந்திரி, மாநில உள்துறை மந்திரி ஆகியோருக்கு கல்யாண் தாசில்தார் ஆபீஸ் மூலம் தினமும் கடிதம் அனுப்பி வருகிறேன். நேற்று வரை (சனிக்கிழமை) நான் 1,372 கடிதங்கள் அனுப்பி வைத்திருக்கிறேன். தீவிரவாதி கசாப் உடனடியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று கடிதங்களில் வலியுறுத்துகிறேன்.

தீவிரவாதிகளுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். சிறையில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிக்ககூடாது. தீவிரவாதிகளை உடனடியாக தூக்கில் போடுவதே தீர்வாகும்.

மாநில அரசின் பாதுகாப்பு முறைகள் குறித்தும் என்து கடிதங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறேன். கசாப் தூக்கில் போடப்படும் வரை, எந்த விழாவையும் நான் கொண்டாட போவதில்லை. நான் கடிதம் எழுத தொடங்கியது முதல், எந்த விழாவையும் நான் கொண்டாடவில்லை; ஒதுங்கியே இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி வேதனை

புதுடெல்லி, அக்.23 கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் அமைந்துள்ள அந்நாட்டு பாராளுமன்றத்துக்குள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பையும் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif