கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தங்களால் மன்மோகன் சிங்கினால் செயல்பட முடியவில்லை: பி.சி.கந்தூரி பேட்டி || Manmohan Singh could not be activated pressure coalition parties
Logo
சென்னை 13-10-2015 (செவ்வாய்க்கிழமை)
  • 2015-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை சாந்தி ரங்கநாதனுக்கு முதல்வர் வழங்கினார்
  • தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் ஆலோசனை
கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தங்களால் மன்மோகன் சிங்கினால் செயல்பட முடியவில்லை: பி.சி.கந்தூரி பேட்டி
கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தங்களால் மன்மோகன் சிங்கினால் செயல்பட முடியவில்லை: பி.சி.கந்தூரி பேட்டி
டேராடூன், செப். 23-

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி பி.சி.கந்தூரி-பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஊழலுக்கு எதிராக லோக் ஆயுக்தா ஏற்படுத்த பல மாநிலங்கள் தயங்கி வந்த நிலையில், பலமான லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டு வந்தவர் இவர்.

இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. நிலக்கரி சுரங்க முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன்சிங், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சி விடாப்பிடியாக வலியுறுத்தி வரும் நிலையில், அது மட்டுமே தீர்வல்ல என்று பி.சி.கந்தூரி கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் டேராடூனில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஊழல்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகுவது தீர்வாகாது. அவர் விலகினால், இன்னொருவர் அந்த பதவிக்கு வருவார். ஊழல்கள் மீண்டும் நடக்கும். தற்காலிக தீர்¢வுகளை நோக்கிதான் நாம் செல்கிறோம்.

ஜனநாயக நடைமுறையில் தீமையாக உள்ள பிரச்சினைகளை வேரோடு ஒழிக்க நாம் முயற்சிக்கவில்லை. ஊழல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால், தற்காலிக தீர்வுகள் பயன்தராது. நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசியல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

கூட்டணி அரசியலின் நெருக்கடிகள், சீர்திருத்தத்துக்கு தடையாக உள்ளன. நமது பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார வல்லுனர். கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால், அவரால் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை. சுதந்திரமாக செயல்படவும் இயலவில்லை.

அடித்தளத்தில் இருந்தே சீர்திருத்தத்தை கொண்டு வந்தால் மட்டுமே ஊழல் என்ற நோயை அப்புறப்படுத்த முடியும். நிலையற்ற அரசாங்கங்களால் தனது திட்டங்களை செயல்படுத்த முடியாது. எனவே, ஒவ்வொரு ஆட்சியும் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்யும் வகையில், காலநிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஊழல்வாதிகள் பிரதமர் பதவிக்கு வருவதை தடுக்க, அமெரிக்காவில் உள்ளதுபோல், பிரதமருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர, அரசியல் அமைப்பு சட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பீகாரில் பா.ஜ.க. தோற்றால் பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகுவாரா?: லல்லு ஆவேச கேள்வி

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருந்து விலக தயாரா? ....»