டெல்லி: பிரதமர் பங்கேற்ற விழாவில் வாலிபர் ரகளை || delhi prime minister manmohan singh funtion man attack
Logo
சென்னை 30-05-2015 (சனிக்கிழமை)
டெல்லி: பிரதமர் பங்கேற்ற விழாவில் வாலிபர் ரகளை
டெல்லி: பிரதமர் பங்கேற்ற விழாவில் வாலிபர் ரகளை
புதுடெல்லி, செப்.22-
 
டெல்லியில் இன்று ஆசிய பொருளாதார வளர்ச்சிக்கான மாநாடு நடந்தது. இந்திய சட்டக்கழகம் சார்பில் விக்யான் பவனில் நடந்த இந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங், சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா உள்பட பலர் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கபாடியா பேசி முடித்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங் சிறப்புரையாற்றுவதற்காக தன் இருக்கையில் இருந்து எழுந்து மைக் முன்பு வந்தார்.
 
அப்போது கருத்தரங்கில் பங்கேற்ற அழைப்பாளர் கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் எழுந்தார். மேஜை மீது ஏறி நின்ற அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார்.
 
அந்த நபர் தன் மேல் சட்டையை கழற்றி இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையை உயர்த்தியபடி பிரதமரை கண்டித்து கோஷம் எழுப்பினார். பிரதமரே திரும்பிப்போ டீசல் விலையை திரும்பப்பெறு என்று அவர் திரும்ப, திரும்ப கோஷமிட்டப்படி நின்றார்.
 
இதனால் மாநாட்டு அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் அவரைப் பிடித்து இழுத்து கீழே இறக்கினார்கள். பிறகு அந்த நபரின் வாயைப் பொத்தியபடி வெளியில வேகமாக அழைத்து சென்றனர்.
 
அந்த நபர் டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது பெயர் சந்தோஷ்குமார் சுமன் (32) என்று தெரியவந்தது. வக்கீலான இவர் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
 
கிழக்கு டெல்லியில் உள்ள சகர்பூரில் வசித்து வரும் இவர் உரிய அனுமதி அட்டை பெற்றே மாநாட்டுக்கு வந்திருந்தார். இவர் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியில் உறுப்பினராக இருப்பது தெரியவந்துள்ளது.
 
டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததை கண்டித்து எதிர்ப்புக் கோஷம் எழுப்பியதாக வக்கீல் சந்தோஷ்குமார் சுமன் கூறினார்.
 
மாநாட்டு அரங்குக்குள் அவர் ஓரிரு நிமிடங்கள் கோஷமிட்ட போதும், பிரதமர் மன்மோகன் சிங் கண்டு கொள்ளவில்லை. முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாத அவர், திட்டமிட்டப்படி தன் பேச்சை நிகழ்த்தினார்.
 
அவர் கூறியதாவது:-
 
கடந்த நூற்றாண்டு நமக்கு கசப்புணர்வாக கடந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு மகாத்மா காந்தி சத்யாகிரகம் மூலம் வழிகாட்டினார். நவீன இந்தியாவை ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். அவர் கட்டிய தொழிற்சாலைகளும், அணைக்கட்டுகளும் மதச்சார்பற்ற இந்தியாவுக்கு அடித்தளமாக உள்ளன.
 
இன்று நாட்டின் ஊரகப்பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருவதை நாம் காண்கிறோம். நமது நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு கொண்டே இருக்கிறது. ஆட்சி, நிர்வாகம், நீதி மூன்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை மாற ஆசியப் பிராந்தியம் முக்கிய இடத்தில் உள்ளது. எனவே நாம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தனியார் துறை வளர்ச்சி பெற நாம் அனுமதி கொடுக்க வேண்டும். நல்ல நிர்வாகம் இருந்தால்தான் நல்ல பொருளாதார மேம்பாட்டை எட்ட முடியும்.
 
விரைவில் பாராளுமன்றத்தில் புதிய கம்பெனிகள் சட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரத்து 154 கோடியில் 63 துணை மின் நிலையங்கள்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரத்து 154 கோடி செலவில் அமைக்கப்பட்ட 63 துணை மின் நிலையங்களை ....»

MM-TRC-Set2-B.gif