காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரிப்பு || wind power production decrease tamilnadu all power cut increase
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
  • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரிப்பு
காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரிப்பு
சென்னை, செப். 22-

காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தினசரி மொத்த மின்சார தேவை 12,500 மெகாவாட் ஆகும். தற்போது 8,500 மெகாவாட் மின்சாரம்தான் கிடைத்து வருகிறது. தமிழக அரசின் அனல் மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள் மூலமும், தனியார் காற்றாலைகள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. இதில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்து விட்டது.

மற்ற மாநிலங்களிலும் கடுமையான மின் பற்றாக்குறை நிலவுவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மின்சாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு கேட்ட அளவு மின்சாரம் கிடைக்க வில்லை. தற்போது தமிழக அரசின் அனல் மின் நிலையங்கள் முழு அளவில் மின் உற்பத்தி செய்வதுடன் காற்றாலை மின்சாரம்தான் கைகொடுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சீசன் குறைந்து விட்டதால் காற்றாலைகளிலும் மின் சார உற்பத்தி குறைந்து விட்டது. கூடங்களும் அணு மின் நிலையத்தில் எரி பொருள் நிரப்பும் பணி தாமதத்தால் மின்சார உற்பத்தி தொடங்குவது தள்ளிப் போய்க் கொண்டே செல்கிறது. காற்றாலை மின்சாரம் நிலையானதாக இல்லை. திடீர் என்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. எனவேதான் உற்பத்தி பற்றாக் குறையை சமாளிக்க தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு எப்போதும்போல் உள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் 10 முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களிலும் நீண்ட நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்வெட்டு அதிகரிப்பால் கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் தொழிற் சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி நிறுவனங்களில் உற்பத்தி முடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மின்வெட்டு நிறுத்தப்பட்டுவதால் பொதுமக்கள் பாதிப்புக் குள்ளாகின்றார்கள். பலமணி நேர மின்வேட்டை கண்டித்து சேலம் உள்ளிட்ட நகரங்களில் இரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நிலவும் மின் வெட்டு விவரம்:-

திருச்சி மாவட்டத்தில் 10 மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. அதிகாலை 5 மணி முதல் 6 மணி, காலை 9 மணிமுதல் 12 மணி, 3 மணி முதல் 5 மணிவரை மின்சாரம் துண்டிக்கப் படுகிறது. இரவு 8மணிமுதல் 9மணி வரை, 11 மணிமுதல் 12 மணிவரையிலும் மின் வெட்டு நிலவுகிறது. இது தவிர அவ்வப்போது என 10 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் காலாண்டு தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவிகள், சமையல் செய்ய முடி யாமல் பெண்கள் அவதிப்படுகிறார்கள். தொழிற் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சேலத்தில் 10 முதல் 14 மணி நேரம் வரையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 முதல் 12 மணி நேரம் வரையும், தர்மபுரி மாவட்டத்தில் 12 முதல் 14 மணி நேரம் வரையும்,

நாமக்கல் மாவட்டத்தில் 8 மணி நேரமும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இதே போல் பனியன் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நேரங்களில் மின் தடை செய்யப்படுகிறது. தஞ்சையில் தினமும் 14 மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 6 மணி வரையும் பகலில் மின் வெட்டு நிலவுகிறது. பகலில் 6 மணி நேரம் மின்வெட்டும் இரவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் மின் வெட்டு நிகழ்கிறது. இதனால் விவசாயிகள், மாணவர்கள், பெரும் அவதியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக தினமும் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் நகரம், பேரூராட்சி பகுதிகளில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் என்று ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது. கிராமங்களில் பகலில் 3 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் என்று 9 மணி நேரம் தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயத் திற்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்டு வந்த 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் கடந்த 2 மாதங்களாக 3 மணி நேரமாக குறைக்கப்பட்டு விட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 10 மணி நேரம் மின்தடை இருந்தது. தற்போது 14 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால் மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினமும் 8 மணி நேரம் மின்தடை இருந்தது. கடந்த 10 நாட்களாக மின்தடை நேரம் 11 மணி நேரமாக அதிகரித்துள்ளது. பகல் மற்றும் இரவில் மின்தடை ஏற்படுகிறது. அதேபோல் கடலூர் மாவட்ட கிராம பகுதிகளில் ஏற்கனவே சுமார் 5 மணி நேரம் மின்தடை அமலில் இருந்தது. கடந்த 3 நாட்களாக கூடுதலாக 2 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி தினமும் இரவு, பகலில் மொத்தம் 7 மணி நேரம் மின்சப்ளை தடை ஏற்படுகிறது.

நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தில் 14 மணி நேரம் மின் தடை நிலவுகிறது. பகல் பொழுதில் 8 மணி நேரமும், இரவில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை என 6 மணி நேரமும் மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் போன்ற இடங்களில் தினமும் சுமார் 10 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நம்பியூர் பகுதியில் 18 மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 12 மணி நேரம் முதல் 15 மணி நேரமும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த மின்சார தடையினால் இரவில் தூங்க முடிய வில்லை என்றும் மாணவ- மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். மேலும் தண்ணீர் வினியோகம் செய்யும் நேரங்களில் மின்சார தடையினால் போதிய குடிதண்ணீர் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மின்தடை நேரம் அதிகரித்து வருகிறது. தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. ஆனால் நேற்று 12 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்பட்டது.இரவு 10 மணிக்கு பிறகு அதிகாலை 5 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்பிற்கு ஆளானார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் மாணவ-மாணவிகள் பரித விப்புக்கு ஆளாகி உள்ளனர்.

திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் 12 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. 1 மணி நேரத்துக்கு ஒரு முறை மின் தடை நீடிப்பதால் பொது மக்கள் அவதிபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் 14 மணி நேரம் மின் தடை நீடிக்கிறது. விவசாய சாகுபடி அதிகம் உள்ள இந்த பகுதியில் மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பகலில் 6 மணி நேரமும், இரவு 4 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இரவில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்வெட்டு செய்வதால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி: உதவி செய்ததாக நெல்லையை சேர்ந்தவர் சிக்கினார்

6 ரெயில்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்களில் தீவிரவாதிகளின் கைவரிசை இருப்பது தெரிய வந்து உள்ளது. நாடு ....»