தாலி கட்டியவுடன் பிரிவு: ஐ.எப்.எஸ். அதிகாரியுடன், புதுப்பெண்ணை சேர்த்து வைக்க 2 வது நாளாக போலீசார் முயற்சி || Wedded to the categories ifs officer bride join police try
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
தாலி கட்டியவுடன் பிரிவு: ஐ.எப்.எஸ். அதிகாரியுடன், புதுப்பெண்ணை சேர்த்து வைக்க 2-வது நாளாக போலீசார் முயற்சி
தாலி கட்டியவுடன் பிரிவு: ஐ.எப்.எஸ். அதிகாரியுடன், புதுப்பெண்ணை சேர்த்து வைக்க 2-வது நாளாக போலீசார் முயற்சி
சென்னை, செப். 21-

வளசரவாக்கத்தை சேர்ந்த பட்டதாரி பெண் பவித்ராவுக்கும், நுங்கம்பாக்கம் ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் கோவேந்தன் என்ற ஐ.எப்.எஸ். அதிகாரிக்கும் நேற்று முன்தினம் காலையில் திருமணம் நடந்தது. கோவேந்தன், போர்ச்சுக் கல்லில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றி வருகிறார். ரூ.10 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகைகள், மாப்பிள்ளை கோவேந்தனுக்கு 5 பவுன் மைனர் செயின் ஆகியவற்றை பவித்ராவின் தந்தை பன்னீர் செல்வம் வரதட்சணையாக கொடுத்தார்.

திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை கோவேந்தனின் தந்தை செங்குட்டுவன், கூடுதலாக ரூ.4 லட்சம் பணமும், போர்ச்சுக்கல் செல்வதற்கு 2 விமான டிக்கெட் கட்டணமாக ரூ.1 1/2 லட்சமும் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த புதுப்பெண் பவித்ரா, கொதித்து எழுந்தார். நேற்று மதியம் தனது வக்கீல் எழில்கரோலினுடன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த அவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் திருமணத்துக்கு முன்னரே, மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினை செய்து கொண்டே இருந்தனர். மாப்பிள்ளை கோவேந்தன், என்னை சந்தேகக் கண்ணுடன் பார்க்க தொடங்கினார்.

பேஸ்புக்கில் நண்பர்களுடன் பழக்கம் இருந்தால் அதனை துண்டித்துக் கொள் என்று கூறினார். திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தேன். ஆனால் அவர் மாறவில்லை. எனது தந்தை கூறியபடி உனது பெற்றோரை நடக்கச் சொல் என்றும் அவர் கூறினார். இது போன்ற பேச்சுக்களால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் காரில் ஏறி சென்று விட்டார். வேகமாக கார் கதவை சாத்தியதில் எனது கையில் ஏற்பட்ட காயத்தை கூட அவர் கண்டு கொள்ள வில்லை. எனவே, அவருடன் வாழ்வதற்கு விரும்பவில்லை. ஐ.எப்.எஸ். அதிகாரி கோவேந்தன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் பவித்ரா கூறியிருந்தார்.

வழக்கமாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 அல்லது 3 நாட்கள் கழித்தே விசாரணை நடத்தப்படும். ஆனால் பவித்ராவின் புகார் மனு மீது உடனடியாக விசாரணை நடத்த உத்தர விடப்பட்டது.

வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சியாமளா தேவி, பவித்ராவையும், கோவேந்தனையும் அழைத்து நேற்று மாலையில் விசாரணை நடத்தினார். 2 பேரையும் கவுன்சிலிங் மூலம் சேர்த்து வைக்க முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக உதவி கமிஷனர் சியாமளா தேவி கூறும் போது, கணவன் -மனைவி பிரச்சினை தொடர்பாக எங்களிடம் வரும் புகார் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுப்பதில்லை. பேச்சு வார்த்தை நடத்தி கவுன்சிலிங் மூலம் 2 பேரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்வோம்.

ஐ.எப்.எஸ். அதிகாரி கோவேந்தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீதும் அதே நடைமுறையைத்தான் பின்பற்றுகிறோம். நேற்று விசாரணை முடிந்து வீட்டுக்கு சென்ற பவித்ரா, கோவேந்தன் இருவரும் இன்று 2-வது நாளாக கவுன்சிலிங்குக்கு வருவதாக கூறி உள்ளனர். கவுன்சிலிங் மூலம் கணவன்-மனைவியை சேர்த்து வைக்க முயற்சிப்போம். இதில் உடன்பாடு எற்பட்டால் பிரச்சினை இல்லை. 2 பேரும் சம்மதிக்காத பட்சத்தில் கோவேந்தன் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்றார்.

நேற்றைய விசாரணையின் போது, கோவேந்தன், பவித்ராவுடன் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன். பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பவித்ரா தனது முடிவில் இருந்து மாறாமல் பிடிவாதமாகவே இருந்தார். இன்றைய கவுன்சிலிங்கின் போது, அவரது மனதை மாற்றி கோவேந்தனுடன் சேர்த்து வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்று காலையில், விசாரணை நடத்த பவித்ரா, கோவேந்தன் இருவரையும் போலீசார் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அழைத்தனர். அதற்கு இருவரும் முடிவு எடுப்பதற்கு கால அவகாசம் கேட்டனர்.

கலந்து ஆலோசித்து விட்டு, பிறகு வருவதாகவும் கூறியுள்ளனர். எனவே, இன்று மாலையில் இருவரிடமும் விசாரணை நடை பெறும் என்று தெரிகிறது. இதற்கிடையே, பவித்ராவின் வக்கீல் எழில் கரோலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவேந்தன் ஐ.எப்.எஸ். அதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவது போல் தெரிகிறது. கோவேந்தன் வேண்டாம் என்பதில் பவித்ரா உறுதியாக இருக்கிறார். போலீசார் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கோவேந்தன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தர விடக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பவித்ரா மனம் மாறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ஏப்ரல் 11–ந்தேதி முதல் ரெயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு

சென்னை, பிப். 13–உலக அளவில் இந்திய ரெயில்வே துறை 2–வது இடத்தை பிடித்துள்ளது.மிக நீண்ட தூரம் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif