வாழப்பாடி அருகே பண்ணை வீட்டில் பெண்ணை கொன்று நகை கொள்ளை: கணவரை கட்டிலில் கட்டிப்போட்டு கைவரிசை || valapadi near form house woman murder jewels robbery husband tie bed
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
வாழப்பாடி அருகே பண்ணை வீட்டில் பெண்ணை கொன்று நகை கொள்ளை: கணவரை கட்டிலில் கட்டிப்போட்டு கைவரிசை
வாழப்பாடி அருகே பண்ணை வீட்டில் பெண்ணை கொன்று நகை கொள்ளை: கணவரை கட்டிலில் கட்டிப்போட்டு கைவரிசை
வாழப்பாடி, செப். 21-
 
வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டி முடியனூரை சேர்ந்தவர் வையாபுரி (75) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (70). இவர்களுக்கு ஜெயராஜ் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
 
ஜெயராஜ் கம்மாளப்பட்டி அருகே சொந்தமாக நிலம் வாங்கி அங்கு விவசாயம் செய்து வருகிறார். இதனால் வையாபுரி-சரஸ்வதி ஆகியோர் மட்டும் பூர்வீகமான பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
 
வழக்கம் போல் நேற்று இரவு வையாபுரி வீட்டின் தாழ்வாரத்தில் கட்டிலில் படுத்து தூங்கினார். சரஸ்வதி வீட்டை உள்பக்கமாக தாழ் போட்டு கொண்டு தூங்கினார். அப்போது நள்ளிரவில் 2 வாலிபர்கள் இங்கு வந்துள்ளனர்.
 
அவர்கள் வீட்டிற்கு முன்பு தூங்கி கொண்டு இருந்த வையாபுரியை தாக்கி லுங்கியால் கட்டிலில் கட்டி வைத்தனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் அவர்கள் வீட்டு கதவை தட்டினர். அப்போது வீட்டிற்குள் இருந்த சரஸ்வதி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.
 
அப்போது வீட்டிற்கு வெளியே 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி சத்தம் போட ஆரம்பித்தார். இதையடுத்து அவர்கள் சரஸ்வதியின் வாயை பொத்தினர். பின்னர் அவரை வீட்டிற்குள் இழுத்து சென்று படுக்கையில் வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். தொடர்ந்து அவர்கள் சரஸ்வதி அணிந்திருந்த தங்க வளையல்கள், செயின்கள், தோடுகள் என சுமார் 15 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
மயக்கம் தெளிந்த வையாபுரி அலறினார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் வையாபுரியை அவிழ்த்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சரஸ்வதி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வாழப்பாடி டி.எஸ்.பி. மனோகரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் சரஸ்வதி, வையாபுரி ஆகியோர் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டும், சரஸ்வதி அதிகளவில் நகை அணிந்து இருப்பதை தெரிந்து கொண்டும் பழக்கமான நபர்கள் யாரோ வந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif