பீகார் எம்.பி.க்களின் ஆதரவின்றி மத்தியில் அடுத்த அரசு அமையாது: நிதிஷ்குமார் || Next govt cannot be formed without support of Bihar MPs says Nitish
Logo
சென்னை 27-12-2014 (சனிக்கிழமை)
பீகார் எம்.பி.க்களின் ஆதரவின்றி மத்தியில் அடுத்த அரசு அமையாது: நிதிஷ்குமார்
பீகார் எம்.பி.க்களின் ஆதரவின்றி மத்தியில் அடுத்த அரசு அமையாது: நிதிஷ்குமார்
சாப்ரா,செப்.21-
 
பீகார் மாநிலத்தின் 40 எம்.பி.க்களின் ஆதரவின்றி மத்தியில் அடுத்த அரசு அமையாது என்பதால், அடுத்த அரசு பீகாருக்கு நிச்சயம் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் என தான் நம்புவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி பேசிய நிதிஷ், ‘பீகார் எம்.பி.க்களின் ஆதரவின்றி மத்தியில் அடுத்த அரசு அமையாது. எனவே பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை நீங்கள் (பீகார் மாநில வாக்காளர்கள்) தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றார். ஆனால் 40 எம்.பி.க்கள் பலத்தைப் பெறுவதற்காக பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
 
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழைபெய்யும்: வானிலை மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நல்ல மழைபெய்துள்ளது. சராசரியாக 44 செ.மீ. ....»