வில்லிவாக்கத்தில் அ.தி.மு.க மாணவர் அணி செயலாளரை கொல்ல முயற்சி: கத்தியுடன் வந்த கும்பல் காரை உடைத்து விட்டு ஓட்டம் || killed try admk secretary gang escape villivakkam
Logo
சென்னை 04-08-2015 (செவ்வாய்க்கிழமை)
வில்லிவாக்கத்தில் அ.தி.மு.க மாணவர் அணி செயலாளரை கொல்ல முயற்சி: கத்தியுடன் வந்த கும்பல் காரை உடைத்து விட்டு ஓட்டம்
வில்லிவாக்கத்தில்
 அ.தி.மு.க மாணவர் அணி செயலாளரை கொல்ல முயற்சி:
 கத்தியுடன் வந்த கும்பல் காரை உடைத்து விட்டு ஓட்டம்
வில்லிவாக்கம், செப். 21-

வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளராக உள்ளார். இவரது தாயார் பாத்திமா 95-வது வார்டு கவுன்சிலர் ஆவார். நேற்று இரவு வில்லிவாக்கத்தில் அ.தி.மு.க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அப்பாஸ் பங்கேற்றார்.

பின்னர் இரவு 11.30 மணி அளவில் அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டு கதவை தட்டினார்கள். வீட்டில் இருந்தவர்கள் கதவை வேகமாக திறந்து வந்தனர். வெளியே 3 பேர் அரிவாள், கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே கதவை சாத்திக் கொண்டனர் அப்பாஸ் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து யார் என்று விசாரித்தார். அப்போது அந்த கும்பல் ‘‘உன்னை கொல்ல வந்தோம். வீட்டுக்குள் புகுந்ததால் தப்பிவிட்டாய்’’ என்று கூறி அளிவாளால் கார் கண்ணாடியை உடைத்தனர்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து அப்பாசின் தந்தை அன்சர் அலி வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வில்லிவாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அப்பாசை கொல்ல வந்தது வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படை தலைவன் அழகிரி தலைமையிலான கும்பல் என்று தெரிய வந்தது. அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அர்னால்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

MM-TRC-B.gif