மத்திய அரசின் புதிய முடிவுகள்: பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு 8 மணிக்கு தூர்தர்ஷனில் விளக்கம் || central government new plans prime minister manmohan singh speech in doordharsan
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதாவுக்கு வெள்ளி
  • லிபியாவின் முன்னாள் துணை பிரதமர் கடத்தல்
  • காமன்வெல்த்: ஹாக்கி காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா
  • சகரான்பூர் கலவரத்துக்கு காரணமான 6 முக்கிய குற்றவாளிகள் கைது
  • இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு
மத்திய அரசின் புதிய முடிவுகள்: பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு 8 மணிக்கு தூர்தர்ஷனில் விளக்கம்
மத்திய அரசின் புதிய முடிவுகள்: பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு 8 மணிக்கு தூர்தர்ஷனில் விளக்கம்
புதுடெல்லி, செப். 21-

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய மந்திரி சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.

அத்துடன் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் 2-வது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. இந்த எதிர்ப்பினையும் மீறி அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் விலகியதால், முலாயம்சிங் மற்றும் மாயாவதி ஆகியோர் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை அவர்கள் விமர்சித்து வருகின்றனர். எனவே, கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையிலும், புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.

அதன்படி பிரதமர் இன்று இரவு 8 மணிக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார். அப்போது, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, அன்னிய நேரடி முதலீடு அவசியம் என்பதை பிரமதர் எடுத்துக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கும் விளக்கம் அளிப்பார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சகரான்பூர் கலவரத்துக்கு காரணமான 6 முக்கிய குற்றவாளிகள் கைது

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சகரான்பூரில் நிலப்பிரச்சினை தொடர்பாக இரண்டு பிரிவினருக்கு இடையே கடந்த 26-ம் தேதி ....»