Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
சென்ட்ரலில் சமத்துவ மக்கள் கட்சி ரெயில் மறியல்: 300 பேர் கைது
சென்னை, செப். 21-

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில், இன்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், நெல்லை அமுதன், கே.ஜே.நாதன் ராஜா, மரியமாணிக்கம், சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மறியல் செய்தனர்.

இதில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் தங்கசாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

O
P
E
N

close

அண்மை - சென்னை