கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது: விஞ்ஞானிகள் தீவிரம் || Fuel filling scientists next month power generation start
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது: விஞ்ஞானிகள் தீவிரம்
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது: விஞ்ஞானிகள் தீவிரம்
நெல்லை, செப். 21-
 
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடற்கரையில் ரூ. 14 ஆயிரம் கோடி செலவில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது அணு உலையின் கட்டுமானப்பணிகள் முழுவதும் முடிந்து எரிபொருள் நிரப்ப இறுதிகட்ட ஆய்வுகள் நடந்தது. ஆனால் எரிபொருள் நிரப்பக்கூடாது என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.
 
இந்த நிலையில் கூடங்குளம் அணு உலையில் ஆய்வு நடத்திய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய குழுவினர் கடந்த செவ்வாய்கிழமை எரிபொருள் நிரப்ப சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கடந்த 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தலைமை என்ஜினீயர்கள் கூட்டாக சேர்ந்து அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்கினார்கள்.
 
யுரேனியம் 235 எனப்படும் இந்த எரிபொருள் 5 சென்டிமீட்டர் விட்டமுள்ள இரும்பு கம்பி போல் உள்ளது.இந்த எரிகோல்கள் நவீன டயோசத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய குழாயில் சுமார் 18 முதல் 20 வரை சொருகப்பட்டது. பின்னர் அந்த பெரிய குழாய் அணு உலைக்குள் எடுத்து செல்லப்பட்டு, தானியங்கி எந்திரம் மூலம் அணு உலையில் பொருத்தப்பட்டது.
 
இப்படி மொத்தம் 163 பெரிய குழாய் எரி கேஸ்கள் பொருத்தப்படும். தற்போது 10 சதவீத எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் சுமார் 75 டன் எடை வரை எரிபொருள் நிரப்பப்படும். இந்த பணிகள் அடுத்த மாதம் 5-ந்தேதி முடிவடையும் என்று விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்பிறகு மீண்டும் ஒரு முறை இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம், மற்றும் சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை குழு நேரில் வந்து ஆய்வு செய்து, மின் உற்பத்தி தொடங்க உத்தரவிடுவார்கள்.
 
இதை தொடர்ந்து அடுத்த மாதம் இறுதிக்குள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் கட்ட சோதனை முறையில் ஆன மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட தகவல்களை கூடங்குளம் அணு மின் நிலைய மூத்த அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் பல்வேறு கட்ட பிரச்சினைகளும், கோர்ட் வழக்குகளும் உள்ளதால் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட மறுத்து விட்டனர்.
 
இந்தநிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி இந்திய ராணுவத்தின் முப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணுவம், கப்பல்படை, விமானப்படை ஆகியவற்றின் ஒரு குழு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif