அடுத்த தேர்தலில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும்: கட்சிகளுக்கு வணிகர்கள் ஆதரவு த.வெள்ளையன் அறிவிப்பு || mechants support to fdi against party vellaiyan
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
அடுத்த தேர்தலில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும்: கட்சிகளுக்கு வணிகர்கள் ஆதரவு த.வெள்ளையன் அறிவிப்பு
அடுத்த தேர்தலில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும்: கட்சிகளுக்கு வணிகர்கள் ஆதரவு த.வெள்ளையன் அறிவிப்பு
சென்னை, செப். 21-
 
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் அளித்த பேட்டி வருமாறு:-
 
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டிக்கிறோம்.
 
இந்த அன்னிய முதலீட்டில் உள்நாட்டில் உள்ள வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். வால்மார்ட், கேரிபோர், டெஸ்கோ போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குள்ள விவசாயிகளிடம் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதை குளிர்பதன கிடங்கில் சேமித்து வைப்பர். பின்னர் அப்பொருட்களுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கொள்ளை லாபம் சம்பாதிப்பர்.
 
அன்னிய சக்திகளின் ஆக்கிரமிப்பால் நம்நாடு மீண்டும் அடிமை நாடாக மாறும் நிலை ஏற்படும். இதனால் வணிகர்களாகிய நாங்கள் 2-வது சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்றால்தான் வெற்றி பெற முடியும்.
 
அடுத்த தேர்தலில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சிகளை மட்டுமே ஆதரிப்போம். தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்னிய முதலீட்டுக்கு எதிரான வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவர் மத்திய அரசையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். இது உறுதியான நிலைப்பாடு அல்ல. இரட்டை வேடம்.
 
எனவே இதுபோன்ற உறுதிப்பாடற்ற கொள்கையுடைய தலைவர்களை வணிகர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்.
 
அன்னிய முதலீட்டை நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் எதிர்க்க வேண்டும். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரும் உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும். வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும். இந்த சுதேசி கொள்கையை அனைவரும் கடைபிடித்தால் அன்னிய நிறுவனங்கள் தானாக வெளியேறிவிடும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தார் கிடைப்பதில் தட்டுப்பாடு: சென்னை சாலைகளை சீரமைக்க தார் கொடுக்க முன்னுரிமை- ஐ.ஓ.சி.

சென்னை, பிப். 6–தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த மழை வெள்ளத்தால் 2500 ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif