டெல்லியில் சரத்பவார் மு.க.அழகிரி சந்திப்பு: முக்கிய விஷயங்களில் இணைந்து செயல்பட முடிவு || m.k.alagiri sharad pawar discuss delhi
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
டெல்லியில் சரத்பவார்-மு.க.அழகிரி சந்திப்பு: முக்கிய விஷயங்களில் இணைந்து செயல்பட முடிவு
டெல்லியில் சரத்பவார்-மு.க.அழகிரி சந்திப்பு: முக்கிய விஷயங்களில் இணைந்து செயல்பட முடிவு
புது டெல்லி, செப்.21-

டெல்லியில் நடந்த மந்திரிகள் குழு கூட்டத்துக்கு பிறகு, சரத்பவார்-அழகிரி ஆகியோர் தனியே சந்தித்து பேசினர். சமையல் கியாஸ் சிலிண்டர் உபயோகத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது இவற்றை கண்டித்து, மந்திரி சபையில் இருந்து விலகவும், மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக (18 எம்.பி.க்கள்) திரிணாமுல் காங்கிரஸ் இருந்தது. மம்தா பானர்ஜி விலகியதாலும், கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதால், மத்திய அரசுக்கு இப்போது ஆபத்து ஏற்படப்போவதில்லை.

இந்த பின்னணியில், மந்திரிகள் குழு கூட்டம் சரத் பவார் தலைமையில் நேற்று நடந்தது. வேளாண்மை அமைச்சகத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மு.க. அழகிரியும் கலந்து கொண்டார். இந்த அதிகாரபூர்வ மந்திரிகள் கூட்டம் முடிந்த பின்னர், சரத்பவார், அழகிரி இருவரும் தனியே சாதாரண முறையில் சந்தித்து பேசினர். கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய முடிவுகள் குறித்து, இருவரும் விவாதித்தனர்.

முக்கிய பிரச்சினைகளில் தேசியவாத காங்கிரஸ், தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என்று அவர்கள் முடிவு எடுத்தனர். இவ்விரு கட்சிகளின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்த மாற்று வழிகளை தேர்வு செய்வது பற்றியும் சரத்பவாரும், அழகிரியும் பேசியதாக சொல்லப்படுகிறது.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்தித்து பேசுவதாக இருந்த திட்டத்தை, முன்னெடுத்து செல்ல வேண்டாம் என்றும் தி.மு.க.வும், தேசியவாத காங்கிரசும் தீர்மானித்துள்ளன. எனவே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடான, இந்த கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு நடை பெற வாய்ப்பு இல்லை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஏன் சுனில் பாரதி மிட்டல் தனது சம்பளத்தில் 5 கோடியை குறைத்தார் என்று தெரியுமா?

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுனில் பாரதி மிட்டல் தனது சம்பளத்தில் 5 கோடியை குறைத்துக்கொள்வதாக  ....»