செவ்வாய் கிரகத்தில் பாறையை ஆய்வு செய்த ‘கியூரியாசிட்டி’ விண்கலம் || curiosity satellite rock inspection mars
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
செவ்வாய் கிரகத்தில் பாறையை ஆய்வு செய்த ‘கியூரியாசிட்டி’ விண்கலம்
செவ்வாய் கிரகத்தில் பாறையை ஆய்வு செய்த ‘கியூரியாசிட்டி’ விண்கலம்
வாஷிங்டன், செப். 21-

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கியூரியாசிட்டி’ என்ற ஆய்வுகூட விண்கலத்தை அங்கு அனுப்பியது. அது அங்கு 2 வருடங்கள் தங்கியிருந்து ஆய்வு செய்ய உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய சில மணி நேரத்தில் போட்டோக்களை எடுத்து அனுப்பி வைத்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது முதன் முறையாக செவ்வாய் கிரகத்தின் பாறையை வெட்டி எடுத்து ஆய்வு செய்துள்ளது.

ஆய்வு கூடத்தில் உள்ள ‘ரோபோ’ வாகனம் பிரமிட் வடிவிலான பாறையை வெட்டி எடுத்துள்ளது. அந்த போட்டோவை ‘நாசா’ மைத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த பாறை 10 ‘இஞ்ச்‘ உயரம், 16 ‘இஞ்ச்‘ அகலமும் உடையது.

இதன் மூலம் செவ்வாய் கிரக ஆய்வில் சோதனை தொடங்கி விட்டதாக ‘நாசா’வின் செவ்வாய் கிரக ஆய்வுகூட திட்ட விஞ்ஞானி ஜான் குரோட்ஷிங்கர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் கடந்த 19-ந்தேதி (புதன் கிழமை) இரவு 100 அடி தூரம் கியூரியாசிட்டி ஆய்வு கூடம் நகர்ந்து இந்த பாறையை வெட்டி எடுத்துள்ளது. இதன் மூலம் இதுவரை அது 950 அடி தூரம் நகர்ந்துள்ளது என்றார்.

செவ்வாய் கிரகத்தில் ‘கியூரியாசிட்டி’ ஆய்வு கூடம் வெட்டி எடுத்த பாறைக்கு ‘நாசா’ விஞ்ஞானி ‘ஜேக் மாடிஜெவிக்‘ பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் செவ்வாய் கிரக ஆய்வுக்கு தலைமை வகித்தவர். மேலும் கியூரியாசிட்டி விண்கலத்தை வடிவமைத்த என்ஜினீயர் ஆவார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

மீன்களுக்கும் காய்ச்சல் வரும்: ஆய்வில் தகவல்

சில குறிப்பிட்ட வகை மீன் இனங்களுக்கும் காய்ச்சல் வரும் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக ....»