காங்கோ நாட்டில் போட்டி அரசாங்கம்: புரட்சிபடை அமைத்தது || Congo country government army set up
Logo
சென்னை 28-04-2015 (செவ்வாய்க்கிழமை)
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
  • நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்டுத் தாருங்கள்: இந்தியாவிடம் ஸ்பெயின் வேண்டுகோள்
  • வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
காங்கோ நாட்டில் போட்டி அரசாங்கம்: புரட்சிபடை அமைத்தது
காங்கோ நாட்டில் போட்டி அரசாங்கம்: புரட்சிபடை அமைத்தது
கிவூ, செப். 21-

ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக எம்-23 என்ற புரட்சிப்படை அமைப்பினர் நீண்ட காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் அங்குள்ள கிவூ பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து காங்கோ அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். பொதுமக்களிடம் அவர்களே வரி வசூல் செய்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதனால் புரட்சி படை மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்துவருவதற்கு காங்கோ ராணுவம் தயாராகி வருகிறது.

புரட்சிபடையினர் வசம் உள்ள கிவூ பகுதியில் ஏராளமான கனிம சுரங்கங்கள் உள்ளன. இதில் இருந்து தான் காங்கோ நாட்டுக்கு அதிக வருமானம் கிடைத்து வந்தது. புரட்சி படையினர் இப்போது கனிம சுரங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

மேலும் பக்கத்து நாடானா உகாண்டா, ருவாண்டோ ஆகிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளையும் புரட்சிப்படையினர் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் காங்கோ நாட்டில் பெரும் மோதல் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஐ.நா.சபை அடுத்த வாரம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பிராட் பிட் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கான ரகசியம் தெரிந்தது

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் முகத்தில் ஏற்பட்ட காயம் அவருடைய தீவிர ரசிகர்களை கவலையடைய ....»

amarprakash160-600.gif