அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டனின் காதல் லீலையை அம்பலப்படுத்தும் புத்தகம்: காதலி மோனிகா வெளியிடுகிறார் || america ex president bill clinton love books girl friend Monica release
Logo
சென்னை 30-08-2015 (ஞாயிற்றுக்கிழமை)
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டனின் காதல் லீலையை அம்பலப்படுத்தும் புத்தகம்: காதலி மோனிகா வெளியிடுகிறார்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டனின் காதல் லீலையை அம்பலப்படுத்தும் புத்தகம்:
 காதலி மோனிகா வெளியிடுகிறார்
நியூயார்க், செப். 21-

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஆக இருந்தவர் பில்கிளிண்டன். அவரிடம் மோனிகா லெவின்ஸ் என்ற இளம் பெண் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது அவர்களுக்கு இடையே காதல் இருந்தது. அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், மோனிகா லெவின்ஸ் தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் வெளிப்படையாக ஒரு புத்தகம் எழுதுகிறார். அதில், பில்கிளிண்டனுடன் அவர் கொண்ட காதல் குறித்தும் விளக்க உள்ளார். மேலும், அதனால் எழுந்த பிரச்சினைகளும் வெள்ளை மாளிகையில் தான் பட்ட அவமானங்கள் குறித்தும் தெரிவிக்க திட்ட மிட்டுள்ளார். இவை தவிர, பில்கிளிண்டனுக்கு காதல் ரசம் சொட்ட அவர் எழுதிய கடிதங்களும், புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

கிளிண்டனும் நடத்திய காதல் களியாட்டங்களையும், லீலைகளையும் ஒளிவு மறைவு இன்றி அம்பலப்படுத்த உள்ளார். எனவே, இந்த புத்தகம் வெளியாகும் போது பரபரப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இதன் பதிப்பக உரிமையை பெற இப்போதே கடும் போட்டி நிலவுகிறது. இந்த புத்தகத்தின் மூலம் மோனிகாவுக்கு ரூ.65 கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பா.ஜனதா–கம்யூ. தொண்டர்கள் கொலை: 15 வீடுகள் சூறை - பதட்டம் நீடிப்பு

திருவனந்தபுரம், ஆக. 30– கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், பாரதீய ஜனதா கட்சியினருக்கும் இடையே மோதல் நடைபெறும் ....»

amarprash.gif