வெஸ்ட்இண்டீசுடன் நாளை மோதல்: ஆஸ்திரேலியா 2 வது வெற்றி பெறுமா? || tomorrow play west indies vs australia
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
வெஸ்ட்இண்டீசுடன் நாளை மோதல்: ஆஸ்திரேலியா 2-வது வெற்றி பெறுமா?
வெஸ்ட்இண்டீசுடன் நாளை மோதல்:
 ஆஸ்திரேலியா 2-வது வெற்றி பெறுமா?
கொழும்பு, செப். 21-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. 4-வது நாளான இன்று நியசிலாந்து- வங்காள  தேசம், இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 5-வது நாளான நாளையும் (சனிக்கிழமை) 2 ஆட்டம் நடக்கிறது. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் `சி' பிரிவில் உள்ள இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே `சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
இரு அணிகளும் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இருந்தது. 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் `பி' பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் அயர்லாந்தை எளிதில் வென்று இருந்தது. இதனால் அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் வாட்சன், வார்னர், ஒயிட்,  ஹஸ்சி சகோதரர்கள் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், கும்மின்ஸ், ஸ்டார்க் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது தான் முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது. தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும்  அந்த அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

கிறிஸ்கெய்ல், வெயின் சுமித், போல்லாட், பிராவோ, சிம்மன்ஸ், நரீன், ரச்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தென்ஆப்பிரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது 20 ஓவர் போட்டி

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ....»

VanniarMatrimony_300x100px_2.gif