சமையல் கியாசை தொடர்ந்து மண்ணெண்ணை அளவையும் மத்திய அரசு குறைத்தது: ஏழைகள் பாதிக்கப்படும் அபாயம் || Central Government has reduced the kerosine
Logo
சென்னை 23-07-2014 (புதன்கிழமை)
சமையல் கியாசை தொடர்ந்து மண்ணெண்ணை அளவையும் மத்திய அரசு குறைத்தது: ஏழைகள் பாதிக்கப்படும் அபாயம்
சமையல் கியாசை தொடர்ந்து மண்ணெண்ணை அளவையும் மத்திய அரசு குறைத்தது: ஏழைகள் பாதிக்கப்படும் அபாயம்
புதுடெல்லி, செப். 21-

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு விதித்து, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு மேல் பெறப்படும் கியாஸ் சிலிண்டர்களுக்கு சந்தை விலை கொடுக்க வேண்டும் என்றும் கூறிவிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களை குறிப்பாக நடுத்தர மக்களை கடும் அதர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்நிலையில் ஏழை மக்களையும் மத்திய அரசு விட்டு வைக்கவில்லை. ஏழை, எளியவர்கள் பய்னபடுத்தும் மண்ணெண்ணையிலும் மத்திய அரசு கை வைத்துள்ளது.

கியாஸ் சிலிண்டர் இல்லாத குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 லிட்டர் மண்ணெண்ணை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருப்பவர்களுக்கு 3 லிட்டர் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 1.5 கோடி ரேசன் அட்டைகளுக்கு மண்ணெண்ணை விநியோகிக்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணை தேவை. ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கான மண்ணெண்ணை ஒதுக்கீட்டை சில மாதங்களாகவே குறைத்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதி, தமிழகத்துக்கான மண்ணெண்ணை ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், ஏற்கனவே வழங்கி வந்த அளவைவிட தற்போது குறைவாகவே ஒதுக்கி இருக்கிறது. அதாவது இந்த மாத ஒதுக்கீட்டில் 13,377 கிலோ லிட்டர் மண்ணெண்ணை குறைக்கப்பட்டுள்ளது. வெறும் 45 ஆயிரம் கிலோ லிட்டர் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டை கொண்டு தகுதியான ரேஷன் கார்டுகளுக்கு முழுமையான அளவில் மண்ணெண்ணை வழங்க முடியாத நிலையில் பொது விநியோக துறை அதிகாரிகள் உள்ளனர். அதே சமயம் தகுதியான அனைத்து கார்டுகளுக்கே மண்ணெண்ணை வழங்கியாக வேண்டும்.

மண்ணெணை பற்றாக்குறை உள்ளதால் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணை அளவு குறைக்கப்பட உள் ளது. இதுவரை 10 லிட்டர் வீதம் மண்ணெண்ணை வாங்கி வந்தவர்களுக்கு தற்போது 8 லிட்டர் வீதம் வழங்கப்படுகிறது. பல ரேஷன் கடைகளில் 2 லிட்டர் குறைவாகவே மண்ணெண்ணை வினியோகிக்கப்படுகிறது. அதேநேரத்தில் 3 லிட்டர் வீதம் வாங்கி கொண்டிருப்பவர்களுக்கு (ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள்) அளவு குறைக்கப்படவில்லை. அதேஅளவே வினியோகிக்கப்படுகிறது.

கியாஸ் சிலிண்டரில் கை வைத்த மத்திய அரசு, ஏழை, எளியவர்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணையிலும் கை வைத்து இருப்பது அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அதிகரித்து இருக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சர்ச்ச்சையில் சிக்கிய நீதிபதியை நிரந்தர நீதிபதியாக்க கடிதம் எழுதிய மன்மோகன்

நீதிபதிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் ....»