மத்திய மைனாரிட்டி அரசின் அந்நிய முதலீட்டு அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது: மம்தா கடும் தாக்கு || Mamata slams notification on FDI in retail as shocking
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
மத்திய மைனாரிட்டி அரசின் அந்நிய முதலீட்டு அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது: மம்தா கடும் தாக்கு
மத்திய மைனாரிட்டி அரசின் அந்நிய முதலீட்டு அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது: மம்தா கடும் தாக்கு
கொல்கத்தா,செப்.21-
 
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து நேற்று மத்திய அரசு அவசர அறிவிப்பை  வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இணையதள செய்தியில் அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
அந்நிய முதலீட்டை அனுமதிக்கும்  மத்திய அரசின் அறிவிப்பு செய்தி ஊடகத்தில் வெளிவந்ததை பார்த்து  அதிர்சியுற்றேன். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறும் வேளையில், மைனாரிட்டி காங்கிரஸ் அரசு இந்த அவசர மற்றும் பலவந்த திடீர் அனுமதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
மைனாரிட்டி அரசான காங்கிரசுக்கு ஒரு முறையானதாக, நேர்மையானதாக மற்றும் ஜனநாயகமாக இது தெரிகிறதா? இந்த நடவடிக்கை அவர்களின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டது.
 
முன்பு நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக,  இது ஜனநாயக மரபுக்கு சவால் விடும் விதமாக உள்ளது.30 லட்சம் மக்களுக்கு மேல் பாதிக்கப்படும் இந்தப் பிரச்சினையில், இப்படிப்பட்ட ஒரு அவசர முடிவை ஏற்பதற்கான கட்டாயம் இந்த மைனாரிட்டி அரசுக்கு நிகழ்ந்த மர்மம் பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடுஇரவில் இந்த செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
 
இவ்வாறு அச்செய்தியில் அவர் கூறியுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து, இன்று அவருடைய கட்சி மத்திய மந்திரிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுப்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

காங்கிரஸ், லாலு நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய சுமை: அமித் ஷா

பீகார் சட்டசபைக்கு வரும் 12-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ....»

VanniarMatrimony_300x100px_2.gif