இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் ராஜபக்சேவிடம் பிரதமர் வலியுறுத்தல் || Rajapaksa meet Prez PM talks rehab process fishermen
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வழிவகை செய்ய வேண்டும்- ராஜபக்சேவிடம் பிரதமர் வலியுறுத்தல்
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வழிவகை செய்ய வேண்டும்- ராஜபக்சேவிடம் பிரதமர் வலியுறுத்தல்
புதுடெல்லி,செப்.21-
 
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.
 
40 நிமிடங்களுக்கு மேலாக நடந்த சந்திப்பில் இருதரப்பு அரசுப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்சேவிடம் வலியுறுத்தி கூறியதாவது:-
 
இலங்கை தமிழர்கள் இனி மதிப்பு மற்றும் மரியாதையுடன் வாழ அவர்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்து வழங்க வேண்டும். மேலும் இந்திய மீனவர்கள் கடல் எல்லையில் கடக்கிறபோது அவர்கள் மீதான துன்புறுத்தலையும் மற்றும் கைது நடவடிக்கைகளையும் கைவிட்டு மனிதாபிமான முறையில் இலங்கை ராணுவத்தினர் நடந்துகொள்ள வேண்டும்.
 
இவ்வாறு அவர் வலியுறுத்தி கூறினார்.
 
பிரதமருடனான சந்திப்பின்போது ராஜபக்சே குறிப்பிட்டு கூறியதாவது:-
 
வடக்குப் பகுதியில் உள்ள மூன்று மாகாணங்களுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளன. மற்ற பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த இனவாத பிரச்சினையை சரியாக கையாண்டு அங்குள்ள தமிழர்களை மீண்டும் தங்களது பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
மீனவர் தாக்கப்படுவது குறித்த பிரச்சினையில் மேலும் மீனவர் சங்கங்கள் சந்தித்து கலந்துரையாடுவதே சிறந்ததாக இருக்கும் என்று அப்போது இருதரப்பு அதிகாரிகளும் ஒத்துக்கொண்டனர். பொருளாதாரப் உடன்படிக்கைகள் மற்றும் வணிக மேம்பாடு குறித்தும் பேசப்பட்டது.
 
இலங்கையில் நடந்த கபிலவஸ்த்து புரதான சின்னக் கண்காட்சியினை 30 லட்சம் மக்கள் கண்டு களித்தது குறித்து பிரதமருக்கு ராஜபக்சே நன்றி தெரிவித்துகொண்டார். பிறகு குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ராஜபக்சேவிற்கு பிரதமர் உணவளித்து மகிழ்ந்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பாகிஸ்தானுக்கு 860 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கக்கூடாது: அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை

ராணுவ தளவாளங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பாகிஸ்தானுக்கு 860 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif