மக்கள் விரோத முடிவுகளை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கூட்டு போராட்டம் முலாயம் சிங் || protest against central government mulayam singh informations
Logo
சென்னை 06-10-2015 (செவ்வாய்க்கிழமை)
மக்கள் விரோத முடிவுகளை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கூட்டு போராட்டம்-முலாயம் சிங்
மக்கள் விரோத முடிவுகளை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கூட்டு போராட்டம்-முலாயம் சிங்
புதுடெல்லி,செப்.21-
 
டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் பிரகாஷ் கரத், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா ஆகியோரை ஓரணியில் கொண்டு வந்து, டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
 
அப்போது முலாயம் சிங் யாதவ் பேசுகையில், நாட்டு மக்களை பாதிக்கிற கொள்கைகளை வரிசையாக மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த கொள்கைகளால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது விவசாயிகள். நாங்கள் நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களின் குறைகளைக் கேட்போம்.
அதன்பின்னர் எங்கள் வியூகத்தை வகுப்போம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
 
அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் பாராளுமன்ற வீதியில் ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். அதைத்தொடர்ந்து முலாயம் சிங் யாதவ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
நான் ஏற்கனவே பல முறை சொல்லி விட்டேன். மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் கியாஸ் வினியோகத்தில் கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி உள்ளிட்ட தனது முடிவுகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. மக்கள் விரோத நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள மாட்டோம்.
 
எங்கள் கோரிக்கைப்படி மத்திய அரசு அவற்றைத் திரும்பப்பெறாவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்துவது குறித்து நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி திட்டம் வகுப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் நிருபர்களிடம் பேசுகையில், இன்றைய நிலவரப்படி, நாங்கள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால் இது எவ்வளவு காலத்துக்கு தொடரும் என்பதை என்னால் கூற இயலாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கட்சித்தலைவர் முடிவு செய்வார் என கூறினார்.
 
மத்திய அரசுக்கு மெஜாரிட்டி இருந்தாலும், பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வரலாம். திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்களே நாடு இடைத்தேர்தலை நோக்கிப்போய்க்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் (பாராளுமன்றத் தேர்தலுக்கான) எங்கள் வேட்பாளர்களை அறிவிக்க தயார் ஆகி விடுவோம் என்றும் ராம்கோபால் யாதவ் கூறினார்.
 
திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சியின் ஆதரவையும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவையும்தான் மத்திய அரசு நம்பியுள்ளது. மத்திய அரசுக்கான தனது ஆதரவு குறித்து பகுஜன் சமாஜ் கட்சி அடுத்த மாதம் 10-ந் தேதி தனது முடிவை பகிரங்கமாக அறிவிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதுவரையில் முலாயம் சிங்கும் தனது திட்டம் குறித்து எதையும் பகிரங்கமாக அறிவிக்க மாட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பசுவதை தடைச் சட்டத்தை நாடு முழுவதும் பிரதமர் மோடி நடைமுறைப்படுத்த வேண்டும்- யோகா குரு பாபா ராம்தேவ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமலாக்கப்பட்டது போல நாடுமுழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைப் ....»

VanniarMatrimony_300x100px_2.gif