முழு அடைப்பு போராட்டம் வெற்றி: வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் பேட்டி || strike win vanigar sangam vellaiyan interview
Logo
சென்னை 30-01-2015 (வெள்ளிக்கிழமை)
முழு அடைப்பு போராட்டம் வெற்றி: வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் பேட்டி
முழு அடைப்பு
போராட்டம் வெற்றி:
 வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் பேட்டி
சென்னை, செப். 20-

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை முழு அளவில் பங்கேற்றது. கோயம்பேட்டில் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது வெள்ளையன் கூறியதாவது:-

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வணிகர்கள் முழு அளவில் தங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 45 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னையில் பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், கோயம்பேடு, பாரிமுனை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராடி வருகிறார்கள்.

மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு வெள்ளையன் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் கே.தேவராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ப.தேவராஜ் வட சென்னை மாவட்ட தலைவர் வியாசை மணி, தென் சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சவுந்தர் ராஜன் நிர்வாகிகள் டைமன் ராஜா, நூர் முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பதக்கம் பெற்ற மறுநாள் கொல்லப்பட்டவர்: மனிதாபிமானத்தால் உயிர் இழந்த ராணுவ அதிகாரி

வீர தீர செயலுக்காக குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட யுத் சேவா பதக்கம் பெற்றவர்களில் ராணுவ கர்னல் ....»