அன்னாஹசாரே குழுவில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகல்: பெயர் படத்தை பயன்படுத்த ஹசாரே தடை || arvind kejriwal resign from anna hazare team
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
அன்னாஹசாரே குழுவில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகல்: பெயர்-படத்தை பயன்படுத்த ஹசாரே தடை
அன்னாஹசாரே குழுவில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகல்:
 பெயர்-படத்தை பயன்படுத்த ஹசாரே தடை
புதுடெல்லி, செப். 20-

ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே குழுவினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். இதற்கு மத்திய அரசு செவி சாய்க் காததால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வற்புறுத்தி வருகிறார்கள். அவரது கருத்துக்கு குழுவில் ஒருமித்த ஆதரவு இல்லை. அன்னாஹசாரேயும் அரசியல் கட்சி தொடங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அன்னாஹசாரே தனது குழுவை கலைத்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று ஊழலுக்கு எதிரான வருங் கால திட்டம் குறித்து அன்னா ஹசாரேயுடன் அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன் கிரண்பெடி, சந்தோஷ் ஹெக்டே, மனிஷ் சிசோடியா, குமார் விஸ்வாஸ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் கட்சி தொடங்கும் யோசனைக்கு அன்னா ஹசாரே நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் தனது குழுவினர் அரசியல் கட்சி தொடங்கினால் அது அவர்கள் விருப்பம். அதில் இணைய மாட்டேன்.

அரசியல் கட்சி தொடங்குபவர்கள் எனது பெயரையோ, போட்டோவையோ பயன் படுத்தக்கூடாது என்றும் அன்னா ஹசாரே தெரிவித்தார். இதனால் அன்னா ஹசாரே குழுவில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகிவிட்டார். அவர் அரசியல் கட்சி தொடங்கு வதில் உறுதியாக இருக்கிறார். இதை கருத்தில் கொண்டு தான் டெல்லி ஜந்தர் மந்தரில் தன்னிச்சையாக உண்ணா விரதம் இருந்தார். பின்னர் அன்னாஹசாரேயும் அதில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஏற்கனவே கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறார். அதில் அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அன்னாஹசாரே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்குப் பின் டெல்லியில் உள்ள யோகா குரு பாபா ராம்தேவ் வீட்டுக்கு இரவு சென்று அவருடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் உடன் இருந்தார். அவர்கள் சந்திப்பை ராம் தேவின் செய்தி தொடர்பாளர் பிரமோத் ஜோஷி உறுதி செய்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தனக்கு தெரியாது என்று கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சிறைத்துறை ஐ.ஜி. முன் வாக்குமூலத்தை பதிவு செய்தார் இந்திராணி

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி ....»

VanniarMatrimony_300x100px_2.gif