ராஜபக்சேக்கு இன்றிரவு மன்மோகன்சிங் விருந்து: தமிழக கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு || today night rajapaksa tinner manmohan singh
Logo
சென்னை 31-03-2015 (செவ்வாய்க்கிழமை)
ராஜபக்சேக்கு இன்றிரவு மன்மோகன்சிங் விருந்து: தமிழக கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
ராஜபக்சேக்கு இன்றிரவு
மன்மோகன்சிங் விருந்து: தமிழக கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
புதுடெல்லி, செப். 20-

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் புத்தமத மற்றும் அறிவுசார் பல் கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. இலங்கை அதிபர் ராஜ பக்சே பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அவரது வருகைக்கு தமிழகத்தில் உள்ள தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

சில கட்சிகள் போராட்டங்கள் நடத்தியது. ராஜபக்சே இந்தியா வரக்கூடாது. அவருக்கு மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும் வரவேற்பு அளிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இது குறித்து மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதினார்.

ஆனால் அவரது கோரிக்கையை மத்திய பிரதேச அரசு நிரா கரித்து விட்டது. இதையடுத்து வைகோ ராஜபக்சேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தொண்டர்களுடன் 40 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டார். ஆனால் அவரை மத்திய பிரதேச அரசு தங்கள் மாநில எல்லையில் தடுத்து விட்டது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை அதிபர் ராஜபக்சே 4 நாள் அரசு பயணமாக சிறப்பு விமானத்தில் நேற்று மாலை டெல்லி வந்தார்.

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு ராஜபக்சே ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசுகிறார். அங்கு அவருக்கு தேனீர் விருந்து அளிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் ராஜபக்சே சந்தித்து பேசுகிறார். அங்கு அவருக்கு மன்மோகன்சிங் இரவு விருந்து அளிக்கிறார்.

இலங்கையில் இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் தமிழர் மறு குடியேற்றப் பணிகள் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல் விவகாரம் குறித்தும் ராஜபக்சேவிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது. நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய பிரதேசம் புறப்பட்டு செல்லும் ராஜபக்சே சாஞ்சியில் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராஜபக்சே வருகையையொட்டி மத்திய பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பெருவில் 3000 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி

பெருவின் தென்கிழக்கு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து 3000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 ....»