காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் தோல்வியில் முடிந்தது: பிரதமர் அதிர்ச்சி || cauvery water sharing between karnataka and tamilnadu failed manmohan singh shocked
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • மீனவருக்கு தூக்கு தண்டனை: சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டதுஅடியை தொட்டது மேட்டூர் அணை
காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் தோல்வியில் முடிந்தது: பிரதமர் அதிர்ச்சி
காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் தோல்வியில் முடிந்தது: பிரதமர் அதிர்ச்சி
புதுடெல்லி,செப்.19-
 
காவிரி நதிநீர் ஆணையத்தின் 7-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
 
இக்கூட்டத்தில், நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்பதை முதல் அமைச்சர் ஜெயலலிதா சுட்டிக் காட்டினார்.மேலும் காவிரி டெல்டா பகுதியில் உள்ள 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்றும் வகையில், கர்நாடக அரசு தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு திறந்துவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
இதனை ஏற்க கர்நாடக அரசு மறுத்தது. கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
 
இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, தினமும் 1 டிஎம்சி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி வேண்டினார். இதனை ஏற்ற பிரதமர் மன்மோகன்சிங், தமிழகத்திற்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை 9000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறினார்.
 
இதனையும் ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர், ஒருசொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கூறியதுடன், கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை என்று தமிழக முதல்வரும் கூறினார்.இவ்வாறு ஆணையத்தின் முடிவை இரு மாநிலங்களும் ஏற்காததால் சமரச கூட்டம் தோல்வியில் முடிந்தது. நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மும்பையில் இன்று நடைபெறும் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவை சிவசேனா புறக்கணிக்க முடிவு

மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற 15 ....»